• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சாத்தான்குளம் அருகே ஒருவர் கொலை – சம்மந்தப்பட்டவர்‌‌‌கள்‌‌‌ இருவர் உடனடியாக கைது

policeseithitv by policeseithitv
July 3, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சாத்தான்குளம் அருகே ஒருவர் கொலை – சம்மந்தப்பட்டவர்‌‌‌கள்‌‌‌ இருவர் உடனடியாக கைது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சாத்தான்குளம் அருகே ஒருவர் கொலை – சம்மந்தப்பட்டவர்‌‌‌கள்‌‌‌ இருவர் உடனடியாக கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் சாத்தான்குளத்தில் முகாமிட்டு விசாரணை.

சாத்தான்குளம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட தஞ்சை நகரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த சுப்பையா மகன் அருமைக்கொடி (58) (இறந்தவர்) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த (எதிரி) ஆசிர்வாதம் மகன் செல்வராஜ் (54) (எதிரி) என்பவரும் நண்பர்கள். இவர்கள் இருவரும் அடிக்கடி ஒன்று சேர்ந்து மது அருந்தும் பழக்கமுடையவர்கள்.

இந்நிலையில் நேற்று (02.07.2021) இருவரும் புதுக்குளத்தில் உள்ள காலியாக உள்ள இடத்தில் மது அருந்தி இருக்கின்றனர், மதுபோதையில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது, அப்போது அங்கு வந்த (2வது எதிரி) செல்வராஜ் மகன் தாவீது (24), அவரது தந்தையான செல்வராஜ் ஆகிய இருவரும் சேர்ந்து துண்டால் கழுத்தை இறுக்கியும் மற்றும் கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த சாத்தான்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அருமைக்கொடி உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் விரைந்து சென்று சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். பின் அங்கேயே முகாமிட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், தூத்துக்குடி தலைமையிட கூடுதல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் மேற்பார்வையில் சாத்தான்குளம் (பொறுப்பு) காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் மற்றும் தூத்துக்குடி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணபிரான் ஆகியோர் தலைமையில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் அருள் சாம்ராஜ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து சம்மந்தப்பட்ட எதிரிகள் இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவிட்டார்.

           

உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினர் மேற்கொண்ட தீவிர தேடுதல் வேட்டையில் சம்மந்தப்பட்ட எதிரிகளான செல்வராஜ் மற்றும் அவரது மகன் தாவீது ஆகியோரை உடனே கைது செய்தனர். இதுகுறித்து சாத்தான்குளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயராம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மேற்படி எதிரிகளை உடனடியாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

Previous Post

குடிபோதையில் நண்பனை கொலைசெய்த நான்‌‌‌கு பேர் கைது

Next Post

வெளியில்‌‌‌ சுற்‌‌‌றி திரியும்‌‌‌ மனநலம் பாதிக்கபட்டவர்களுக்‌‌‌கு சிகிச்‌‌‌சை அளிக்‌‌‌க மத்திய மண்டல ஐ.ஜி உத்‌‌‌தரவு

Next Post
வெளியில்‌‌‌ சுற்‌‌‌றி திரியும்‌‌‌ மனநலம் பாதிக்கபட்டவர்களுக்‌‌‌கு சிகிச்‌‌‌சை அளிக்‌‌‌க மத்திய மண்டல ஐ.ஜி  உத்‌‌‌தரவு

வெளியில்‌‌‌ சுற்‌‌‌றி திரியும்‌‌‌ மனநலம் பாதிக்கபட்டவர்களுக்‌‌‌கு சிகிச்‌‌‌சை அளிக்‌‌‌க மத்திய மண்டல ஐ.ஜி உத்‌‌‌தரவு

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In