சாதாரண சிறு பிரச்சினை வந்தால் அதை எதிர்கொள்வதற்கு நாம் சிரமப்பட்டு மன உளைச்சலுக்கு ஆளாகிறோம். ஆனால் தன் வாழ்க்கை முழுவதும் தினமும் பெரிய பிரச்சினைகளை கையாண்டு வரும் காவல்துறையினருக்கு மன உளைச்சலில் இருந்து மீள்வது எப்படி…..?? பிரச்சினைகளைக் கையாள்வது எப்படி..?? என்பதைப்பற்றிய சிறப்பு வகுப்பை தொடங்கிவைத்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்…..!!!!
திருச்சி மாவட்டம் திருச்சி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு சிறப்பு வகுப்பு ஒன்றை திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் இ.கா.ப தொடங்கி வைத்தார்.
அச் சிறப்பு வகுப்பில் காவலர்களின் மன அழுத்தத்தின் காரணங்களை கேட்டறிந்தும், அதற்கான தீர்வு காண்பது எவ்வாறு என்பதை பற்றியும், திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் ராதிகா கூறினார்.
திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மூர்த்தி இ.கா.ப. காவலர்கள் தங்களுடைய காவல் நிலையத்திற்கு வரும் புகார்தாரர்களிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும், மேலும் அனைத்து பொதுமக்களிடமும் மனிதநேயத்துடன் சிறப்பாக பணிபுரிந்து காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஒரு நல்லுணர்வை வளர்க்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கினார்.

