கொடைக்கானலில் 7 வது கட்டமாக இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது மருத்துவ முகாம் ஏற்பாடுகளை தொடர்ந்து செய்துவரும் கொடைக்கானல்
திமுக நகர செயலாளர் எஸ். முகமது இப்ராஹிம், மற்றும் அவருடன் இணைந்து மருத்துவ முகாம்களை செய்துவரும் அனைவரையும் கொடைக்கானல் மக்கள் மனதார பாராட்டி வருகிறார்கள். கொடைக்கானலில் உள்ள பல்வேறு பகுதிகளில் இந்த முகாம்கள் நடத்தப்பட்டு வருவதால் பொதுமக்கள் பயன் பெற்று வருகின்றனர் இதுவரை 6-வது கட்டமாக தடுப்பூசி முகாம் கொடைக்கானலில் நடைபெற்று வந்த நிலையில்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி, மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் மற்றும் பழனி சட்டமன்ற உறுப்பினர் I.P.செந்தில்குமார்,MA.BL,MLA, அவர்களின் முயற்சியால் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் கொடைக்கானலில்
ஏழாவது கட்டமாக
வருகிற 04/07/2021 அன்று கொடைக்கானல் புனித சவேரியார் மேல்நிலைப்பள்ளி நாயுடுபுரம் பகுதியில் வைத்து நடைபெற உள்ளதுகொரோனா பரவலை தவிர்க்கவும், அதன் கொடூர பாதிப்பிலிருந்து நம்மையும் நம் குடும்பத்தினர் உயிரை பாதுகாக்கவும் தடுப்பூசி மிகவும் அவசியமானது . அனைத்து மக்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் தம்மை பாதுகாத்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
நம்மையும்நாட்டுமக்களையும்காப்போம்!!! தொற்றிலிருந்துதமிழகத்தைமீட்போம்!!! என்று சுவரொட்டிகள் மூலம் கொடைக்கானலில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு தடுப்பூசி போடவேண்டிய பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய தகவல்களை விழிப்புணர்வு மூலம் பொது மக்களுக்கு கொண்டு செல்கிறார் திமுக நகர செயலாளர் இப்ராஹிம் அவர் பொதுமக்களுக்கு தெரிவித்ததாவது
குறிப்பு-
1. அனைவரும் வரும் போது தவறாமல் உங்களது ஆதார் அட்டையை கொண்டு வரவும்.
2. அனைவரும் கட்டாயமாக முக கவசம் அணிந்து வரவேண்டும்.
3. அனைவரும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். என்றும் கூறப்பட்டது
என்றும் மக்கள் பணியில் என்ற இலக்கோடு நாள்தோறும் கொடைக்கானல் மக்களின் நலன் கருதி பல்வேறு மக்கள் பிரச்சினைகளை எடுத்துச்செல்லும்
எஸ் முகமது இப்ராஹிம்,
நகர செயலாளர்,
நகர்மன்ற முன்னாள் தலைவர், அவருக்கு
*கொடைக்கானல். மக்கள் தங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து வருகின்றனர் நேற்று முன்தினம் கொடைக்கானல் கோட்டாட்சியர் அவர்களை நேரில் சந்தித்து வீட்டு மனை பட்டா அடங்கலில் உடனே ஏற்று அறிவுறுத்தி மனு அளித்தார் தற்போது கொரோனா தொற்றிலிருந்து பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்போடு ஈர்ப்பதற்காக தொடர்ந்து ஏழாவது கட்டமாக தடுப்பூசி முகாம் நடத்துவதற்கு முயற்சிகள் மேற்கொண்டு வரும் இவரது பணி அனைத்து தரப்பினராலும் பாராட்டப்படுகிறது கொடைக்கானல் நகராட்சி நிர்வாகமும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது கொடைக்கானல் நகர் நல அலுவலர் (பொறுப்பு) சுப்பையா தலைமையில் நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தடுப்பூசி முகாமினை சிறப்பாக செய்து வருகின்றனர் அவர்களையும் அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகிறார்கள் செய்தி தொகுப்பு போலீஸ் செய்தி கொடைக்கானலை ஐ எஸ் மோகன்

