காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு
நல திட்டங்களை வழங்கினார்.
காங்கிரஸ் சார்பில் ஈரோடு எம்.எல்.ஏ திருமகன் ஈவெரா 100 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு
நல திட்டங்களை வழங்கினார்.
ஈரோட்டில் கடந்த 29ந் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கொரோனா பெருந்தொற்று பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட பூர்ணா, பன்னீர்செல்வம் பார்க், சிவரஞ்சனி ஹோட்டல், காமராஜர் வீதி, ரயில் நிலையம் இந்திரா காந்தி, ஆகிய ஆட்டோ ஸ்டாண்டுகளில் உள்ள 100 க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரவி தலைமை தாங்கினார். மண்டலத் தலைவர்களான திருச்செல்வம், விஜயபாஸ்கர், ஜாபர் சாதிக் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை துறை தலைவர் சுரேஷ் செய்திருந்தார், மாவட்ட துணைத்தலைவர்களான ராஜேஷ் ராஜப்பா, பாபு என்கிற வெங்கடாஜலம், ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், மொடக்குறிச்சி முன்னாள் வட்டார தலைவர் செந்தில் ராஜா, ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட விவசாய பிரிவை சார்ந்த பெரியசாமி, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய கண்ணா,மாவட்ட எஸ்சி பிரிவு தலைவர் சின்னசாமி, மாநில சிறுபான்மை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி,மாநில எஸ்சி பிரிவு துணைத்தலைவர் குளம் ராஜேந்திரன். மாவட்ட பொதுச் செயலாளர்களான முகமது அர்சத், கண்ணப்பன், சச்சிதானந்தம், அன்பழகன், வின்சன்ட், கராத்தே யூசுப் சிறுபான்மைத்துறை துணைத்தலைவர் பாஷா, நான்காம் மண்டல சிறுபான்மை துறை தலைவர் சூர்யா சித்திக், யூசுப், சிராஜ்தீன், டிட்டோ,சிவா, கார்த்திக், சதீஷ் மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.
செய்தி ஈரோடு வேலுமணி

