• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

policeseithitv by policeseithitv
June 28, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினர் 15 பேருக்கு எஸ்பி ஜெயக்குமார் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 15 காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

கடந்த 21.06.2021 அன்று திருச்செந்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் தாலுகா அலுவலக சாலையில் சந்தேகத்திற்கிடமாக நின்ற நான்கு சக்கர வாகனத்தை சோதனை செய்தபோது அதில் தடைசெய்யப்பட்ட சுமார் 2 கிலோ எடையுள்ள 2 கோடி ரூபாய் மதிப்புள்ள அம்பர்கிரீஸ் எனப்படும் திமிங்கல உமிழ்நீர் வைத்திருந்தவர்களை பிடித்து வன உயிரினங்கள் பாதுகாப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க மேற்படி 4 எதிரிகள், நான்கு சக்கர வாகனம் மற்றும் 2 கிலோ அம்பர்கிரீஸ் ஆகியவற்றை பறிமுதல் செய்து திருச்செந்தூர் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைத்த திருச்செந்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ஞானசேகரன், உதவி ஆய்வாளர் சுந்தரம், திருச்செந்தூர் போக்குவரத்து தலைமை காவலர் ராஜ்குமார், ஆத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் இசக்கியப்பன், திருச்செந்தூர் காவல் நிலைய முதல் நிலை காவலர் சொர்ணராஜ் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த செல்போன் பறிப்பு வழக்கின் எதிரியை கைது செய்து அவரிடம் இருந்து 2 செல்போன்களை கைப்பற்றிய ஏரல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ராஜாமணி மற்றும் தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சரவணகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 20.06.2021 அன்று சாயர்புரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாயர்புரம் பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரி முன்பு வாகன தணிக்கை செய்து கொண்டிருக்கும்போது அங்கு வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி பெட்ரோல் டேங்க் மீது இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் சாக்கு பையை சோதனை செய்தபோது அதில் அபாயகரமான ஆயுதங்கள் இருந்ததை கைப்பற்றி எதிரியை கைது செய்து சாயர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்த சாயர்புரம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் . ராஜேந்திரன், தலைமை காவலர் சங்கர், முதல் நிலை காவலர்கள் இன்பராஜ் மற்றும் இளையராஜா ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

எட்டயாபுரம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த கோப்புக்கு எடுக்கப்படாத வழக்குகளில் கடந்த ஒரு வாரத்தில் 52 வழக்குகள் நீதிமன்ற கோப்புக்கு எடுக்கப்பட்டும், 16 வழக்குகளின் சொத்துக்களை நீதிமன்றத்தில் ஒப்படைத்த எட்டையாபுரம் காவல் நிலைய தலைமைக் காவலர் புருஷோத்தமன் மற்றும் முதல் நிலை காவலர் கோவில்பிள்ளை ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

குலசேகரப்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடல்நகர் பட்டுலிங்கம் என்பவரது குடிசை வீடு தீப்பிடித்து முழுவதும் சேதம் அடைந்த நிலையில் அந்த கிராமத்திற்கு நியமிக்கப்பட்ட கிராம காவலர் திரு. திருநாவுக்கரசு துரிதமாக செயல்பட்டு தீயணைப்பு வாகனம் விரைந்து வர தகவல் கூறி தானும் தீயை அணைக்க உதவி செய்து வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்த நிலையில் இருந்ததால் அந்த குடும்பத்தினருக்கு அத்தியாவசிய தேவைகளுக்கான உதவிகளைத் தனிப்பட்ட முறையில் செய்து கொடுத்த குலசேகரப்பட்டினம் காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திருநாவுக்கரசு என்பவரின் மெச்சத்தகுந்த பணிக்கவும்,

புதியம்புத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நடந்த பகுதியில் நடந்த விபத்து வழக்கின் உண்மையான எதிரியை அடையாளம் கண்டு வழக்கை கொலை முயற்சி வழக்காக மாற்றம் செய்ய துணையாக இருந்த ஓட்டப்பிடாரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் பாலமுருகன் என்பவரின் மெச்சத்குந்த பணிக்காகவும்,

ஒரு காவல் ஆய்வாளர் உட்பட 15 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட கண்காணிப்பாளர். எஸ். ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பேச்சிமுத்து உடனிருந்தார்.

Previous Post

திருமங்கலம் உதவி கமிஷனர் உட்பட 6 போலீசார்‌‌‌ மீது சி.பி.சி.ஐ.டி வழக்கு பதிவு

Next Post

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Next Post
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் காவல் அதிகாரிகள், ஆளினர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In