தூத்துக்குடி & ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொரோனா கால நிவாரண பொருட்களான தூக்கு படுக்கை (Stretcher), சக்கர நாற்காலி (Wheel Chair) மற்றும் படுக்கை விரிப்பு (Bed Sheet) போன்றவற்றை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் வழங்கினார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு தூத்துக்குடி ரூ ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் – ரஜினி மக்கள் மன்றம் சார்பாக கொரோனா கால நிவாரண பொருட்களான 4 தூக்கு படுக்கைகள், 4 சக்கர நாற்காலிகள் மற்றும் 300 படுக்கை விரிப்புகள் போன்றவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மேற்கண்டவற்றை இன்று அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் நேருவிடம் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் பொருளாளர் திரு. பொன்முருகன், தூத்துக்குடி மாவட்ட இணை செயலாளர் தவமணி மற்றும் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் செய்திருந்தனர். இதில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை உறைவிட மருத்துவ அதிகாரி சைலஸ் ஜெபமணி, தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தராஜன் உட்பட போலீசார் உடனிருந்தனர்.

