சென்னை பெருநகர காவல்துறையில் சார்பில் போக்குவரத்து குற்றங்களே இல்லாத சென்னயை உருவாக்கும் முகாமை தெற்கு் போக்குவரத்து இணை கமிஷனர் செந்தில்குமாரி.ஐ.பி.எஸ் நேற்று துவக்கி வைத்தார்.
வைஷ்ணவா கல்லூரி எதிரில் உள்ள சிக்னலில் சரியாக சாலை விதிமுறைகளை பின்பற்றாத வாகன ஓட்டிகளை அழைத்து நாற்காலியில் அமரவைத்து உயிர் பாதுகாப்பு பற்றிய சாலை விதிமுறைகளையும் மற்றும் கொரோனா பற்றிய அறிவுறை வழங்கியும் மற்றும் விதிமுறைகளை பின்பற்றும் வாகன ஓட்டிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கியும் கௌரவித்தார். அதுமட்டுமன்றி கொரோனா பற்றிய விழிப்புணர்வுடன் முககவசம் கிருமிநாசினி ஊட்டச்சத்து பொருள் அடங்கிய உணவும் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் குமார் தெற்கு் போக்குவரத்து துணை கமிஷனர் உதவி கமிஷனர் பாலசுப்ரமணியன் புனித தோமையர் மலை). மற்றும் தாம்பரம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஜெய்குமார் அவருடன் காவல் ஆளினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினர்.வைஷ்ணவா கல்லூரி எதிரில் சாலையில் செல்லும் பொதுமக்களுக்கு தினம்தோறும் கொரோனா விழிப்புணர்வு நடைபெற சிறப்பான காவல் ஆளினர்களை நியமித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பாக கண்காணித்தும் வருகின்றனர்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்கள் காவல்துறையினரை பாராட்டினர்

