தூத்துக்குடியில் குடும்பத் தகராறில் தங்கையை அரிவாளால் வெட்டிய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: தூத்துக்குடி, தாளமுத்துநகர் மொட்ட கோபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேசேகர் மனைவி ராசாத்தி (28), இவர் கடந்த 2 ஆண்டுகளாக கணவரை பிரிந்து தாயார் வீட்டில் வசித்து வருகிறார். இதனை அவரது அண்ணன் ஆறுமுகம் (38) என்பவர் கண்டித்து, கணவர் வீட்டிற்கு செல்லுமாறு வற்புறுத்தினாராம்.
இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த ஆறுமுகம், ராசாத்தியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரண்யா வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். தலைமறைவாக உள்ள ஆறுமுகத்தை போலீசார் தேடி வருகிறார்.

