தூத்துக்குடி மாவட்டத்தில் பொதுமக்கள் ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்திற்குட்பட்ட ‘இ” சேவை மையங்களில் அளிக்கலாம் என ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு : கோவிட் 19 கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க மத்திய அரசு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவித்துள்ளது. தமிழக அரசும் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவித்துள்ளது. மேலும் தமிழக அரசாணை எண் 395 வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை துறை நாள்: 07.06.2021 மற்றும் கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் அறிவுரைகளின்படி தற்போது நிலவி வரும் கரோனா தொற்று நோய் காரணமாகவும், மற்றும் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் விதமாகவும் வருவாயத் தீர்வாய நாட்களில் பொது மக்கள் வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் நேரில் வந்து ஜமாபந்தி மனுக்களை கொடுப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்திற்குட்பட்ட இணையவழி ‘இ” சேவை மையங்களில் நாளது தேதியிலிருந்து 31.07.2021 வரையிலான நாட்களில் ஜமாபந்தி கோரிக்கை தொடர்பான மனுக்களை பதிவு செய்து தீர்வு காணுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொதுமக்கள் இந்நாட்களில்; வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வந்து வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு பதிலாக தங்கள் வட்டத்திற்குட்பட்ட இணையவழி ‘இ” சேவை மையங்களுக்கு நேரடியாக சென்று ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை பதிவு செய்து தீர்வு காணுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கி. செந்தில் ராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் 1430-ம் பசலி ஆண்டிற்கு வருவாய்த் தீர்வாயம் நடைபெறுவது தொடர்பாக அரசாணை எண் 395 வருவாய் நிர்வாகம் பேரிடர் மேலாண்மை துறை நாள்: 07.06.2021 படியும் கூடுதல் தலைமைச் செயலர் /வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும் தற்போது நிலவி வரும் கரோனா நோய் பெருந்தொற்று காரணமாகவும் நோய் தொற்று பரவுதலை தடுக்கும் விதமாகவும் வருவாய்த் தீர்வாய நாட்களில் பொது மக்கள் வருவாய்த் தீர்வாய அலுவலரிடம் அளிக்கும் மனுக்களை தற்போது தங்கள் வட்டத்திற்குட்பட்ட இணையவழி ‘இ” சேவை மையங்களில் நாளது தேதியிலிருந்து 31.07.2021 வரையிலான நாட்களில் பதிவு செய்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. கி. செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.

