தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே பண்ணம்பாறை ஜங்ஷனில் அமைந்துள்ள பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் 10.06.2021 அன்று வியாழக்கிழமை சிறப்பு யாக பூஜை நடைபெற்றது.
இடைக்காட்டு சித்தரின் சிஷ்யராக 40 ஆண்டு காலம் வாழ்ந்து, திருவண்ணமாலை, நாணல்காடு, ஸ்ரீவைகுண்டம், திருச்சி பொன்ற ஊர்களில் பல கோயில்களை கட்டியர் பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமிகள். இவர் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே அமைந்துள்ள பண்ணம்பாறை கிராமத்தில் கடந்த ஆண்டு ஜீவசமாதி அடைந்தார்.
இந்நிலையில், அமாவாசை தினமான 10.06.2021 வியாழக்கிழமை அன்று இரவு உலகத்தை அச்சுறுத்தும் கொரானா நோயில் இருந்து மக்களை காக்க பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமி சன்னதியில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், பச்சை வேட்டி சடையாண்டி சித்தர் சுவாமிகளின் பக்தர்கள் கலந்து கொண்டனர். இதில், அரசு விதிமுறைப்படி முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியுடன் கடைபிடித்து, சுவாமி தரிசனம் செய்தனர்.


