முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது
இதையடுத்து, http://cmcell.tn.gov.in/register.php என்ற இணைய முகவரியில் பொதுமக்கள் தங்கள் புகார்களை அளிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அளித்த புகார் சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றியும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்துக்கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று திமுக தேர்தல் பிரசாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

