சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் ராமசந்திரன் இல்லத்திருமணவிழாவில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
சென்னை.ஜுன் 8,
சென்னை மண்ணிவாக்கம், புதுநகர் எம்.ராமசந்திரன் – திருமதி.ஆர்.மங்கை அவர்களின் இளைய குமாரர் ஆர்.நிரேஷ்குமார்-எஸ்.புஸ்பா திருமணவிழா நேற்று (07.6.2021) திங்கட்கிழமை மாலை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவர்களுடன் தலைமைச் செயலக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.
மண்ணிவாக்கம் புதுநகர் ஊராட்சி மன்றம் துணைத்தலைவர் வி.குமார் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
மேலும், இத்திருமண நிகழ்ச்சியில் வி.கோதண்டராமன் ரெட்டியார், எம்.பி. லோகநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை நேரில் வாழ்த்தினர்.

