தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்களால் வழங்கப்பட்ட முகக்கவசம், கிருமி நாசினி மற்றும் கையுறைகள் ஆகியவற்றை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் அனைவருக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பகிர்ந்தளித்தார்.*
*தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறையினரின் உபயோகத்திற்காக நன்கொடையாளர்கள் முகக் கவசம், கிருமி நாசினி, மற்றும் கையுறைகள் ஆகியவை வழங்கியுள்ளனர். அவற்றை தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்கள் மற்றும் ஆயுதப்படையில் பணியாற்றறும் காவல்துறையினர் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்குமாறு தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்களுக்கு உத்தரவிட்டார். அதன்படி மேற்படி அனைத்து உபகரணங்களும் பிரித்து அளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, அனைத்து காவல் நிலையங்களிலிருந்தும் ஒரு காவலர் வரவழைக்கப்பட்டு அனைவருக்கும் இன்று மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வழங்கினார்.*
*அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள், காவல்துறையினர் அனைவரும் இவற்றை நல்லமுறையில் பயன்பெறும் வகையில் பயன்படுத்த வேண்டும் என்றும், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அறிவுரை வழங்கினார்.*

*இந்நிகழ்வின் போது தூத்துக்குடி குழந்தைகள் மற்றும் பெண்களுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி, காவல் கட்டுப்பாட்டு அறை ஆய்வாளர் திரு. ஏழுமலை உட்பட காவல்துறையினர் உடனிருந்தனர்.*

