கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், முன்கள பணியாளர்களாக விளங்கும் காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செய்தியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர்.
கொரானா நோய் தொற்று பரவ துவங்கிய கால கட்டத்தில் இருந்து இயேசுவிடுவிக்கிறார் அமைப்பின் மூலம் பல கட்டமாக பொதுமக்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வழங்கி ஏழை-எளிய மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார் மோகன் சி லாசரஸ்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மருத்துவக்கல்லூரி டீனிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கொரானா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
மேலும், தமிழக முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் சார்பில் 1.5 கோடி ரூபாய் நிதியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் சுமார் 2500 காவலர்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள கையுறை, சானிடைசர், முககவசம் போன்ற கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரிடம் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் மோகன் சி லாசரஸ் தெரிவித்தாவது: பொதுமக்களை பாதுகாப்பதற்காக முன்களபணியாளர்களாக விளங்கும் காவலர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். கொரானா நோய் தொற்றிலிருந்து காவலர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதால், இந்த கொரானா பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், எஸ்.பி.இன்பெக்டர் பேச்சிமுத்து, போலீஸ் பிஆர்ஓ சத்தியநாராயணன் மற்றும் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர். கொரானா நோய் தொற்று பரவல் காரணமாக, பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், முன்கள பணியாளர்களாக விளங்கும் காவலர்கள், செவிலியர்கள், மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், செய்தியாளர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சேவையாற்றி வருகின்றனர்.

கொரானா நோய் தொற்று பரவ துவங்கிய கால கட்டத்தில் இருந்து இயேசுவிடுவிக்கிறார் அமைப்பின் மூலம் பல கட்டமாக பொதுமக்களுக்கு கொரானா நிவாரண பொருட்களை வழங்கி ஏழை-எளிய மக்களுக்கு உதவி புரிந்து வருகிறார் மோகன் சி லாசரஸ்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ரூ.16 லட்சம் மதிப்புள்ள கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் மருத்துவக்கல்லூரி டீனிடம் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் முன்னிலையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள கொரானா பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.
மேலும், தமிழக முதலமைச்சரின் கொரானா நிவாரண நிதிக்கு இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் சார்பில் 1.5 கோடி ரூபாய் நிதியை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் சுமார் 2500 காவலர்களுக்கு தலா ரூ.500 மதிப்புள்ள கையுறை, சானிடைசர், முககவசம் போன்ற கொரானா பாதுகாப்பு உபகரணங்கள் அடங்கிய தொகுப்புகளை சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமாரிடம் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் நிறுவனர் மோகன் சி லாசரஸ் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் மோகன் சி லாசரஸ் தெரிவித்தாவது: பொதுமக்களை பாதுகாப்பதற்காக முன்களபணியாளர்களாக விளங்கும் காவலர்கள் இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனர். கொரானா நோய் தொற்றிலிருந்து காவலர்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்பதால், இந்த கொரானா பாதுகாப்பு உபகரணங்களை தூத்துக்குடி மாவட்ட காவல்துறையில் பணியாற்றும் காவலர்களுக்கு வழங்கியுள்ளோம் என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் ஏ.டி.எஸ்.பி. கார்த்திகேயன், எஸ்.பி.இன்பெக்டர் பேச்சிமுத்து, போலீஸ் பிஆர்ஓ சத்தியநாராயணன் மற்றும் இயேசு விடுவிக்கிறார் அமைப்பின் மக்கள் தொடர்பு அலுவலர் சாந்தகுமார், ஜேக்கப் ஆகியோர் உடன் இருந்தனர்.
செய்தி தொகுப்பு: எம் ஆத்தி முத்து