கொரோனா ஊரடங்கு காலத்தில் முன்கள பணியாளர்களாக நெல்லை மாநகர காவல் துறையினருடன் இணைந்து பணிபுரிந்து வரும் ஊர்காவல் படையினருக்கு நேற்று கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகரம் டவுன் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி ஏற்பாட்டில் நேற்று நெல்லையப்பர் கோயில் வாசல் முன்பு மாநகர ஊர்க்காவல் படையினர் 20 நபர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு வகைகள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
இதனை நெல்லை மாநகர காவல்துறை துணை ஆணையாளர் ஸ்ரீனிவாசன் அவர்கள், டவுன் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் அவர்கள், டவுன் காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி மற்றும் உதவி ஆய்வாளர் ஜனகன் ,மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சங்கரநாராயணன், பரமசிவம், நடராஜன் ஆகியோர் வழங்கினர்

