நத்தம் நகரில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்ட காவல் துறை மற்றும் நத்தம் வர்த்தகர்கள் இணைந்து முளையூர் செக்போஸ்ட்,மணக்காட்டூர் சந்திப்பு,வத்திபட்டி சந்திப்பில் மேலும் நகரில் முக்கிய பகுதிகளில் 50 கண்காணிப்பு கேமராக்களும், நிறுவப்பட்டுள்ளன.
இந்த கண்காணிப்பு கேமராக் களுக்கான கட்டுப்பாட்டு அறையை டிஐஜி முத்துச்சாமி காணொலி காட்சி மூலம் நேற்று மாலை திறந்துவைத்தார்.
கேமராக்களின் செயல்பாட்டை எஸ்பி ரவளிபிரியா தொடங்கி வைத்தார் விழாவில் நத்தம் காவல் ஆய்வாளர் இராஜமுரளி சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும்
காவல் துறையினர் கலந்து கொண்டனர்

