தேவகோட்டை அருகே தாழையூரில் சாராய ஊறல் போட்ட மூன்று பேரை மதுவிலக்கு காவல்துறையினர் கைது செய்தனர்
கொரோன பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன இதனால் சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வரும் நிலையில் அவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றன.இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் குற்றப்பிரிவு காவல்துறை சார்பு ஆய்வாளர்
திருமுருகன் மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் ராமச்சந்திரன் காவலர்கள் இளங்கோ செந்தாமரைக்கண்ணன் சிலம்பரசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டு ஈடுபட்டனர் அப்போது சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறதா?அல்லது சாராய ஊறல் போடப்பட்டுள்ளதா? என தேவகோட்டை தாலுகா முழுவதும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்போது தாழையூர் கிராமத்தை சேர்ந்த நாராயணன், ஸ்டீபன் ராஜ், புதூரை சேர்ந்த ராஜன் ஆகிய மூவரின் வீட்டில் சாராய ஊறல் போடுவதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.அதன் அடிப்படையில் மூன்று பேரின் வீடுகளிலும் இன்று சோதனை மேற்கொண்டதில் நான்கு குடத்தில் சாராய ஊறல் போடப்பட்டது தெரியவந்துள்ளது.
இவர்கள் பயன்படுத்திய பொருட்களை கைப்பற்றிய காவல்துறையினர் மதுவிலக்கு காவல்துறையினர் யிடம் ஒப்படைத்தனர் இவர்கள் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாவட்ட செய்தியாளர் தேவகோட்டை கண்ணன்

