முன்னாள் முதல்வர் கலைஞரின் 98வது பிறந்தநாளை ஒட்டி தமிழகம் முழுவதும் அமைதியான முறையில் கொண்டாடி வருகின்றனர்.
கொரோனா தொற்று பரவல் அசாதாரணமான சூழலின் காரணமாக கலைஞரின் பிறந்தநாள் நிகழ்ச்சியை பொதுவெளியில் கொண்டாட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. எனவே ஆக்கபூர்வமான வகையில் மட்டும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கலைஞரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். எளிய மக்களுக்கு உதவும் வகையில் நலத்திட்ட உதவிகள் பல்வேறு மாவட்டங்களில் வழங்கப்பட்டு வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக முன்னாள் முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 98வது பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடினர். எஸ்பி பட்டிணம் கிளையின் சார்பாக திமுக கொடியேற்றப்பட்டது. பின்னர் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கனி போன்ற அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் ஜமாத் தலைவர் ஹசன் அலி ஆலீம் தலைமை தாங்கினார். சேர்மன் முகமது முக்தார் முன்னிலை வகித்தார்.
மேலும், ஊராட்சி தலைவர் சுலைஹா பீவி சாகுபர் சாதிக், துணைத்தலைவர் தவ்லத் அலி, அவைத்தலைவர் கிராமத் அலி, கிளைச் செயலாளர் ரஃபிக், இளைஞர் அணி அமைப்பாளர் அம்ஜத் அலி, துணை அமைப்பாளர் ஜப்பார், ஹசன், சித்திக், நசாருதீன், யாசிர் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


