ராயபுரம் பகுதியில் சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய வழக்கில் 3 பேர் கைது – 1/2 சவரன் தங்கச் செயின், 3 வெள்ளி கொலுசுகள், ரூ.2,59,00 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல்!
சென்னை போரூர் ஈஸ்வரன் கோயில் 1வது குறுக்கு தெரு எண் 1 / 14 என்ற முகவரியில் வசிக்கும் சாகுல் அமீது ( 40 )த/பெயர் ஷேக் முகமது, என்பவர் தனது நண்பருடன் சேர்ந்து ராயபுரம் பகுதியில் கிரசன்ட் என்ற பெயரில் சூப்பர் மார்க்கெட் கடை நடத்தி வருகிறார் கடந்த 22.5.2021 அன்று சூப்பர் மார்க்கெட் கடையை பூட்டி விட்டு சென்று, மறுநாள் 23.5. 2021 காலை வந்து பார்த்த போது அவரது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த பணம் ரூ. 7, 36,805 திருடு போயிருந்தது தெரியவந்தது.
அதன்பேரில் சாகுல் அமீது N-1 ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ராயபுரம் காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்தில் அருகில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, சிசிடிவி கேமரா பதிவில் தெரிந்த குற்றவாளிகளின் அடையாளங்களை வைத்து தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி சூப்பர் மார்க்கெட்டை உடைத்து திருடிய குற்றவாளிகள் 1)மதன் என்ற மொட்டை மதன்( 20 ) த/பெ லட்சுமி நாராயணன். எண் 233 மூர்த்தி நகர் வியாசர்பாடி, 2) கோபிநாத்( 19 ) த/ பெ கஜேந்திரன், டோபிகனா குடிசை பகுதி, கொசப்பேட்டை. 3 ) விஸ்வா என்ற ஸ்கேல் (20) த/பெயர் துரைசாமி, அப்பு தெரு, வியாசர்பாடி ஆகிய மூன்று நபர்களை இன்று (31.5.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1/2 சவரன் தங்கச் செயின், 3 வெள்ளி கொலுசுகள், ரூ.2,59,00 மற்றும் 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் குற்றவாளி மதன் என்ற மொட்டை மதன் மீது சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் 11 திருட்டு வழக்குகள் உள்ளது. கோபிநாத் மீது ஒரு அடிதடி வழக்கு 2 திருட்டு வழக்குகள் உட்பட மூன்று வழக்குகள் உள்ளது. விஸ்வா என்ற ஸ்கேல் மீது ஒரு திருட்டு வழக்கு உள்ளது தெரியவந்தது. விசாரணைக்குப் பின்னர் குற்றவாளிகள் 3 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

