தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்டவர் கைது – 165 மது பாட்டில்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல்.
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ் அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமை காவலர் திரு. பென்சிங், முதல் நிலை காவலர்கள் திரு. மாணிக்கராஜ், திரு. சாமுவேல், திரு. மகாலிங்கம் காவலர்கள் திரு செந்தில், திரு. திருமணி மற்றும் திரு. முத்துப்பாண்டி ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இன்று (31.05.2021) ரோந்து பணி மேற்கொண்டபோது வடபாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தூத்துக்குடி முத்துகிருஷ்ணாபுரம் 6வது தெருவில் அதே பகுதியைச் சேர்ந்த கற்குவேல் மகன் சரவணகுமார் (40) என்பவர் காரில் வைத்து சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை ஈடுபட்டது தெரியவந்தது. இதுகுறித்து மேற்படி தனிப்படையினர் சரவணகுமாரை கைது செய்து அவரிடமிருந்து 165 மது பாட்டில்கள் மற்றும் ஒரு காரையும் பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. சுந்தர்சிங் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.



