ஊரடங்கை முன்னிட்டு வல்லநாட்டில் உள்ள ஒரு சமூக சேவை அமைப்பான சேதுலட்சுமி டிரஸ்ட் சார்பாக திருநங்கைகள் மற்றும் ஏழை எளிய மக்கள் 100 பேருக்கு அரிசிப்பை மற்றும் காய்கறி தொகுப்புகள் அடங்கிய நிவாரணப் பொருட்களை இன்று (31.05.2021) மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வழங்கினார். மேலும் அனைவருக்கும் உணவு பார்சலும் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவேண்டும், முகக் கவசம் அணிந்து கொள்ள வேண்டும், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்து கொள்ள வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் மேலும் அரசு நடைமுறைபடுத்தியுள்ள இந்த ஊரடங்கு உத்தரவை பொதுமக்களாகி நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுத்தால் கொரோனா தொற்றிலிருந்து நம்மை நாம் காப்பாற்றி கொள்ள முடியும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.
இதற்கான ஏற்பாடுகளை சேதுலட்சுமி டிரஸ்ட் சார்பாக அதனுடைய நிர்வாக மேலாளர் ராமநாராயணன் உட்பட பலர் செய்திருந்தனர். இதில் முறப்பநாடு காவல் ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய்வாளர் ராஜா ராபர்ட் உட்பட காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.


