திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
மேலும் சோதனைச் சாவடிகளில் பணியில் உள்ள காவலர்களிடம் முக கவசம் அணிந்தும் கையுறைகள் அணிந்தும், பாதுகாப்பாக பணியில் ஈடுபடவேண்டும் என அறிவுரை வழங்கினார்.

