தூத்துக்குடி மாவட்டத்தில் 20 ஆயிரத்து 980 மீனவர்களுக்கு அரசு இடைக்கால நிவாரணத்தொகை ரூ.10½ கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. மீனவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது.
தமிழகத்தில் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிவாரணம் ரூ.5 ஆயிரம் தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த ஆண்டு தடைக்கால நிவாரணம் உதவி வழங்க அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 20 ஆயிரத்து 980 மீனவர்களுக்கு ரூ.10 கோடியே 49 லட்சம் நிவாரண உதவித் தொகை ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த நிவாரண உதவி அந்தந்த மீனவர்களின் வங்கி கணக்கில் விரைவில் வரவு வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

