தூத்துக்குடி மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் சுற்றித் திரிந்தவர்களின் 452 பைக்குகள், 5 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 2 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது தவிர தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசார் ரோந்து செல்லும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் இருப்பது தெரிந்தும், தீங்கு விளைவிக்கும் வகையில் தேவையில்லாமல் வெளியே சுற்றித்திரிந்தவர்கள், வாகனத்தில் சென்றவர்கள் என 79 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டப்பிரிவுப்படி வழக்குகள் பதிவு செய்து, அவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் 2 கார் மற்றும் 67 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

