• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தூத்துக்குடி மாவட்டத்தில் 4 மாதத்தில் மட்டும் 43 கிலோ கஞ்சா, 6418 லிட்டர் மதுபானம், 382 லிட்டர் கள் – 20 வாகனங்கள் பறிமுதல் – 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது – எஸ்பி ஜெயக்குமார் அதிரடி நடவடிக்கை

policeseithitv by policeseithitv
May 19, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கொலை, கொள்ளை வழக்குகளில் சம்மந்தப்பட்ட பிரபல ரவுடிகள் 6 பேர் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் பாராட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

*தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 4 மாதத்தில் மட்டும் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் மதுபானம் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 2609 பேர் கைது – ரூபாய் 40 லட்சம் மதிப்புள்ள 43 கிலோ கஞ்சா, 6418 லிட்டர் மதுபானம் மற்றும் 382 லிட்டர் கள் – பணம் ரூபாய் 1,66,000/- மற்றும் 20 வாகனங்கள் பறிமுதல் – 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் அதிரடி நடவடிக்கை.*

*♻️தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப்பொருள், தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் சட்ட விரோதமான மதுபான விற்பனை போன்றவற்றில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டத்தில் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கோபி அவர்கள் தலைமையில் அந்தந்த உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் பல்வேறு தனிப்படைகள் அமைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.*

*அதன்படி கடந்த 4 மாதங்களில் மட்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலைய போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம், கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்பனை செய்ததாக 2472 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 2520 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6418 லிட்டர் மதுபானம், ரூபாய் 11,500/- மதிப்புள்ள 382 லிட்டர் கள், கள்ளச் சாராயம் 65 லிட்டர்,&nbsp; பணம் ரூபாய் 1,62,785/- மற்றும் 19 இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்துள்ளனர்.*<br>

<br>

*♻️மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாக 73 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 89 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து ரூபாய். 4,25,000/- மதிப்புள்ள 43 கிலோ கஞ்சா, பணம் ரூபாய் 3430/- மற்றும் ஒரு இரு சக்கர வாகனததையும் பறிமுதல் செய்துள்ளனர்.*&nbsp; <br>

<br>

*♻️கடந்த 4 மாதத்தில் மட்டும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் வழக்கில் சம்மந்தப்பட்ட 8 பேர் மற்றும் மணல் திருட்டு வழக்கில் ஈடுபட்ட 2 பேர் உட்பட 68 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் 2வது அலையின் தாக்கம் அதிகரித்துள்ளதால், அதிலிருந்து நம்மை காப்பாற்றுவதற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறது. அதற்காக கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு உத்தரவு கடந்த 10.05.2021 முதல் 24.05.2021 வரை அமல்படுத்தியுள்ளது. அத்தியாவசியத் தேவையில்லாமல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம், ஏனென்றால் கொரோனா வைரஸ் ஒருவர் மீது ஒருவராக தொற்றிக் கொண்டு உயிர் வாழ்கிறது. வீட்டை விட்டு வெளியே வராமலும், சமூக இடைவெளி பின்பற்றினால் மட்டுமே கொரோனா வைரஸ் என்ற சங்கிலி தொடர்பை துண்டித்து, அதை அறவே இல்லாமல் ஒழிக்க முடியும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் போட்டுக்கொள்ளுங்கள், நன்கு மூக்கை மூடும் வகையில் முகக்கவசம் அணியுங்கள், அடிக்கடி கைகளை கிருமி நாசினி மற்றும் சோப்பு போட்டு சுத்தம் செய்யுங்கள். பொதுமக்கள் தமிழக அரசு விதித்துள்ள முழு ஊரடங்கு உத்தரவு மற்றும் நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு கொடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Previous Post

புதிய ரேஷன் கார்டு வழங்க பணம் வசூல் – வட்ட வழங்கல் அலுவலர் தற்காலிக பணியிடை நீக்கம்

Next Post

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்

Next Post
திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்

திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் சார்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கினார்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In