தூத்துக்குடி அருகே பெட்டிக் கடையின் பூட்டை உடைத்து 40 ஆயிரம் மதிப்புள்ள நகை பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை மங்கள நகரைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் புகழேந்தி (58). இவர் சாயர்புரம் தேரி ரோட்டில் பெட்டி கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பூட்டை உடைத்து கடையில் அவர் வைத்திருந்த மோதிரம், கம்மல் மற்றும் பணம் ரூ.1500 ஆகியவற்றை திருடிச் சென்றுவிட்டனர். இதன் மொத்த மதிப்பு ரூ.40ஆயிரம் ஆகும். இதுகுறித்து அவர் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

