*இன்று விளாத்திகுளம் காவல் நிலைய பகுதியில் பணம் பறித்து தாக்கி கொலை முயற்சி செய்த எதிரி கைது.*
*விளாத்திகுளம் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட அயன் பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நபரிடம் சட்டை பையில் இருந்த பணத்தை பறித்து கத்தியால் குத்தி கொலை செய்ய முயற்சி செய்ததாக தத்தனேரி கிராமத்தைச் சேர்ந்த கருப்பணன் மகன் செந்தூரான்@செந்தூரப்பாண்டி என்பர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்கபட்டது.*
*விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் உத்தரவின்படி எதிரியை தேடி வந்த விளாத்திகுளம் காவல் ஆய்வாளர் திரு.ரமேஷ் எதிரியை கைது செய்து விசாரணை நடத்தினர்கள். விசாரணையில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி, சாத்தூர்,பந்தல்குடி ஆகிய காவல் நிலையங்களிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் சாயர்புரம், ஏரல்,குளத்தூர், சூரங்குடி, எப்போதும்வென்றான், விளாத்திகுளம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு திருட்டு வழக்குகள் எதிரி மீது இருப்பது தெரியவந்தது. மேற்கொண்டு விசாரணை செய்ததில் கடந்த சில காலங்களில் மாசார்பட்டி, எட்டையாபுரம், சங்கரலிங்கபுரம், விளாத்திகுளம், சூரங்குடி ஆகிய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு அந்தப் பணத்தை வைத்து குடும்பம் நடத்தி வந்ததும் எதிரி கொடுத்த வாக்குமூலத்தில் தெரியவந்தது பின்னர் எதிரியை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.*
*சிறப்பாக விரைந்து செயல்பட்டு எதிரியை கைது செய்து சிறையில் அடைத்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.*


