திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்முழு ஊரடங்கு காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை கடை பிடிக்கப்பட்டுள்ளது
பலசரக்கு கடை இறைச்சிக் கடை மளிகை சாமான்கள் ஆகிய அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அனைத்தும் காலை 10 மணிக்கு மூடப்பட்டு வந்த நிலையில்
ஊரடங்கும் விதிமுறைகளை மீறி தேவை இல்லாமல் முறையான காரணங்கள் இல்லாமல் சுற்றி திரிந்த கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலும் உலா வந்தவர்கள் கொடைக்கானல் போலீசார் தடுத்து நிறுத்தி எச்சரித்தனர் ஊரடங்கை மதிக்காமலும் மாஸ்க் அணியாமலும் ஊர் சுற்றி திரிபவர்களை கொடைக்கானல் காவல் துறை அதிகாரிகள் அவர்களுக்கு அறிவுரை வழங்கியும் அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொண்டனர்
கொடைக்கானல் முழுவதும் காவல்துறையினர் எடுத்துவரும் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் தற்போது தேவையின்றி வெளியே சுற்றும் வாகனங்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது இருந்தாலும் போலீசார் மூஞ்சிகள் லேக் அரசு மேல்நிலைப்பள்ளி ஏரியா உட்பட முக்கிய வீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்


