தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மதுவிற்பனை!!
ஒரே நாளில் 12 பேர் கைது செய்யப்பட்டு 1473 மதுபாட்டில்கள் பறிமுதல்
தனிப்படை போலீசார் அதிரடி எஸ்பி பாராட்டு!!
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும்
சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறுவதாக வந்த புகாரை அடுத்து தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் உத்தரவு பெயரில் மாவட்டம் முழுவதும் அதிக அளவு மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவர்களை கைது செய்து அதிரடி நடவடிக்கை எடுத்தார் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் இவர் தலைமையிலான தனிப்படை மற்றும் திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. சுந்தரம் தலைமையிலான போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (13.05.2021) காவல்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்டதில் தூத்துக்குடியில் தென்பாகம் உதவி ஆய்வாளர் திரு. வேல்ராஜ் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. பென்சிங், மாணிக்கம், சாமுவேல், செந்தில்குமார், மகாலிங்கம், முத்துப்பாண்டி மற்றும் திருமணிராஜன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் வடபாகம் காவல் நிலையத்திற்குட்பட்ட செல்வநாயகபுரத்தில் ரோந்து சென்றபோது சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த திரவியபுரம் 1வது தெருவைச் சேர்ந்த சண்முகம் மகன் செல்வம் (27), கிருஷ்ணராஜபுரம் சூடாமணி மகன் விஜய் செல்வின் (44) மற்றும் அண்ணாநகரைச் அருணாச்சலம் மகன் பொன்னுச்சாமி (51) ஆகியோர் கண்டுபிடிக்கப்பட்டு, அங்கிருந்த 960 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.*
அதே போன்று திருச்செந்தூர் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திருச்செந்தூர் காய்கறி மார்கெட் அருகே உதவி ஆய்வாளர் திரு. சுந்தரம் தலைமையில் தலைமைக் காவலர்கள் திரு. ராஜ்குமார், திரு. இசக்கியப்பன் மற்றும் திரு. சொர்ணராஜ் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ரோந்து சென்றபோது சட்ட விரோதமாக விற்பனை செய்து கொண்டிருந்த திருச்செந்தூரைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் ரவிக்குமார் என்ற சோடாரவி மற்றும் திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகாவைச் சோந்த பண்டாரம் மகன் வைகுண்டம் (34) ஆகிய இருவரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 419 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது குறித்து திருச்செந்த}ர் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. அந்தோணி துரைசிங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.*
மற்றும் தூத்துக்குடி மத்தியபாகம், தருவைக்குளம், ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு மற்றும் கோவில்பட்டி மதுவிலக்கு பிரிவு ஆகிய காவல் நிலையங்களுக்கு எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சோதனை மேற்கொண்டதில் 7 பேரைக் கைது செய்து, அவர்களிடமிருந்து 94 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.*


