ஊரடங்கு கடுமையாக்கப்பட வேண்டும் தமிழக அரசுக்கு பிஜேபி சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலாளர், வழக்கறிஞர் வாரியார் கோரிக்கை

தமிழக அரசு கொரொனா தொற்று அதிகரித்து வருவதால் முழு ஊரடங்கு அறிவித்து சில தளர்வுகளும் அறிவித்துள்ளது. ஆனால் தொற்றின் தாக்கத்தை உணராமல் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியில் சுற்றி திரிகின்றனர். இதனால் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தமிழக அரசு ஊரடங்கினை கடுமையாக்க வேண்டும் என வழக்கறிஞர் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது.
உயிர்ப்பலி அதிகரித்து வரும் சூழ்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவைப்படுகிறது !!ஊரடங்கு அறிவித்தும் ஊர் அடங்காமல் திருவிழா கூட்டம் போல் மக்கள் வலம் வருவதை காண முடிகிறது !!!தேசத்தில் பற்றி எரியும் தீ தன் சட்டைப் பையை தொடும் வரை இங்கு யாருக்கும் அக்கறை இல்லை என்ற கவிஞனின் வரிகள் தான் ஞாபகத்திற்கு வருகிறது !!!
பிரம்பை எடுக்காதவன் தன் மகனைப் பகைக்கிறான் என்ற வேத வசனமும் ஞாபகத்திற்கு வருகிறது . அரசு ஊரடங்கை கடுமையாக்கினால் மட்டுமே அரசின் நோக்கம் நிறைவேறும் !!!
காவல்துறைக்கு முழுமையான அதிகாரம் கொடுத்து தேவையற்று சுற்றித்திரியும் நபர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய உத்தரவிட வேண்டும் !!! மருத்துவ மனைக்கு 100 மீட்டர் அருகில் உள்ள தேனீர் கடைகளைத் தவிர்த்து அனைத்து தேநீர் கடைகளும் உடனடியாக மூடப்பட வேண்டும் !!! அரசு கண்டிப்போடும் கடுமையாகவும் நடக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு என தூத்துக்குடி மாவட்ட பிஜேபி
சிறுபான்மை அணி மாவட்ட பொதுச்செயலாளரும் வழக்கறிஞருமான வாரியார் தெரிவித்துள்ளார்
.

