தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களின் தலைமையில் விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் உஷார் நிலையில் வாகன தணிக்கை, மார்க்கெட் ரோந்து மற்றும் மதுவிலக்கு ரோந்து பணியில் இன்றுஈடுபடுத்தப்பட்டனர்.
நாளை 10.05.2021 (திங்கள் கிழமை) முதல் முழு ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று விளாத்திகுளம் உட்கோட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மதுபாட்டில் விற்பனை செய்த நபர்கள் மீது
விளாத்திகுளம்PS -09 வழக்குகள்
சூரங்குடி PS -04 வழக்குகள்
புதூர் PS -02 வழக்குகள்
மாசார்பட்டிPS -02 வழக்குகள்
எட்டயபுரம் PS -08 வழக்குகள்
எப்போதும்
வென்றான்PS -06 வழக்குகள்
குளத்தூர் PS -06 வழக்குகள்
தருவைகுளம்PS -02 வழக்குகள்
சங்கரலிங்கபுரம்PS -02 வழக்குகள்
என மொத்தம் 41வழக்குகள் பதிவு செய்து 794 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது
சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.


