அரியலூர் மாவட்டத்தில் காவல்துறையில் 1993 பேட்ச் தேர்ந்தெடுக்கப்பட்ட காவலர்களில் ஜெயங்கொண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக பணிபுரிந்த ராதாகிருஷ்ணன் என்பவர் பணியில் இருக்கும்போது விபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அவருடன் பணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட சக காவலர்கள் இணைந்து சமீபத்தில் உதவி ஆய்வாளரின் குடும்பத்தினருக்கு காக்கும் கரங்கள் அமைப்பின் மூலம் காவலர்களால் பெறப்பட்ட உதவித்தொகையாக 5,11,000/- ரூபாயை மதிப்பிற்குரிய அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் முன்னிலையில் இன்று கொடுக்கப்பட்டது. தனிப் பிரிவு ஆய்வாளர் செல்வகுமாரி மற்றும் உதவி ஆய்வாளர் திவாகர் உடன் இருந்தனர்.




