மூன்று ஐ.பி.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கூடுதல் தலைமை செயலாளர் பிரபாகர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதன் விபரம் வருமாறு: சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் மாற்றம் செய்யப்பட்டார் அவருக்கு பதிலாக ஆயுதப்படை கூடுதல் டிஜிபி.,யாக இருக்கும் சங்கர் ஜிவால், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.
சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி ஜெயந்த் முரளி மாற்றப்பட்டு, அவருக்கு பதில், தாமரைக்கண்ணன் நியமிக்கப்பட்டார்.
கோவை போலீஸ் கமிஷனராக இருக்கும் டேவிட்சன் தேவாசீர்வாதம், உளவுத்துறை ஏடிஜிபி.,யாக நியமிக்கப்பட்டு உள்ளார். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகேஷ்குமார் அகர்வால், ஜெயந்த் முரளி ஆகியோருக்கு புதிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.


