• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் இருக்கும் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு செய்தித்துறை அமைச்சர் பதவி

policeseithitv by policeseithitv
May 7, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
முதல்வர் மு.க.ஸ்டாலின் குட்புக்கில் இருக்கும் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு செய்தித்துறை அமைச்சர் பதவி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
கடந்த 1964 ஆம் ஆண்டு 5 மே ஆம் தேதி பிறந்த வெள்ளக்கோவில் சாமிநாதனின் சொந்த ஊர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முத்தூர் ஆகும்.
இளங்கலை பட்டம் பெற்ற அவர், 1996இல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் துரை. ராமசாமியை தோற்கடித்து அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். அவருக்கு திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, 2001, 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கேயம் தொகுதியில் போட்டியிட்ட சாமிநாதன், 7331 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவில் செல்வாக்கு மிக்க பதவியான மாநில இளைஞர் அணி செயலாளர் பதவியில் ஸ்டாலின் இருந்த போது, துணை செயலாளராக பதவி வகித்தவர் வெள்ளக்கோவில் சாமிநாதன். பின்னர் 2017ஆம் ஆண்டு இளைஞர் அணி செயலாளராக அவர் நியமிக்கப்பட்டார்.
உதயநிதி ஸ்டாலினை இளைஞரணி செயலாளராக நியமிக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்தி திமுக தலைமைக்கு கடிதம் அனுப்பினர். இதையடுத்து அப்பதவியில் இருந்து வெள்ளக்கோவில் சாமிநாதன் விலகினார். பின்னர் அவருக்கு இருந்தாலும் அவருக்கு திமுக தலைமை முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைத்து திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது.
திருப்பூர் திமுக மாவட்ட செயலாளர், நெடுஞசாலைத்துறை அமைச்சர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்த வெள்ளக்கோவில் சாமிநாதன், நிர்வாக திறன் மிக்கவர் மட்டுமின்றி, திமுக தலைமைக்கு நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செய்தி மற்றும் விளம்பரத்துறை இலாகா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா 1991-ம் ஆண்டு முதல்முறையாக முதலமைச்சர் பதவியேற்ற போது அவரை வெற்றி பெற வைத்த தொகுதி என்பதால் காங்கேயம் எப்போதுமே அதிமுகவுக்கு ஸ்பெஷல் தான். திமுக வேட்பாளர் ராஜ்குமார் மன்றாடியாரை வீழ்த்தி ஜெயலலிதா வெற்றி பெற்றார். தொடக்கத்தில் காங்கிரஸ் கோட்டையாக இருந்த காங்கேயம் பின்னர் அதிமுகவின் கோட்டையாக மாறியது.

இந்நிலையில் அதனை திமுகவின் கோட்டையாக மாற்ற பம்பரமாக சுழன்று வருகிறார் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன். தனது சொந்த கிராமமான முத்தூரை உள்ளடக்கிய காங்கேயம் தொகுதிக்குள் மட்டும், கொரோனா கால நிவாரணமாக இதுவரை 92,700 பேருக்கு தலா 5 கிலோ அரிசி பை வழங்கியுள்ளார் சாமிநாதன்.

சென்னிமலை, குண்டடம், காங்கேயம், வெள்ளக்கோவில் என அனைத்து ஒன்றியங்களிலும் வீடு தவறாமல் அரிசி பைகளை விநியோகித்து வரும் வெள்ளக்கோவில் சாமிநாதன், இதுவரை நிவாரணப் பணிகளுக்காக மட்டும் தனது சொந்த நிதியில் இருந்து ஒன்றே 2 கோடி ரூபாய் செலவழித்துள்ளாராம்.

வெள்ளக்கோவில் சாமிநாதன் களத்திற்கு வரமாட்டார், மக்களை சந்திக்க மாட்டார் என தன்னை பற்றி கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை சுக்கு நூறாக உடைத்தெறிந்து தனது எதிர்க்கோஷ்டியினருக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். ஒன்றியம் வாரியாக கிராமம் கிராமமாக நிவாரணப் பொருட்களை இவரே நேரில் சென்று வழங்குவதுடன் பொதுமக்களிடம் பெற்ற புகார் மனுக்களை மாவட்ட ஆட்சியருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

ஓய்வறியா சூரியன் போல் திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் வழிகாட்டுதலின் பெயரில் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தொகுதி அதிமுக, அதன்பின் காங்கிரஸ் செல்வாக்கு பெற்று இருந்ததை மாற்றி, அதை திமுக கோட்டையாக மாற்றி காட்டினார் வெள்ளக்கோவில் சாமிநாதன். தமிழக அமைச்சரவையில் உள்ள அனைத்து துறைகளின் செயல்பாடுகளையும் திட்டங்களையும் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்றால் அது செய்தித்துறை மூலமாகவே முடியும் என்பதை உணர்ந்த திமுக தலைவர் முதல்வர் மு.க ஸ்டாலின் இந்த துறைக்கு சரியான நபர் சாமிநாதன் தான் என முடிவு செய்ததாக அறிவாலயம் மூத்த நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது. செய்தித்துறையிலும் ஒரு சாதனை படைப்பார் சாமிநாதன் என்கிறார்கள் விசயம் அறிந்தவர்கள்.

 

Previous Post

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து 8 டன் ஆக்சிஜன் நெல்லை கொண்டு வரப்பட்டது.

Next Post

மகேந்திரன், ஒரு துரோகி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

Next Post
மகேந்திரன், ஒரு துரோகி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா்  கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

மகேந்திரன், ஒரு துரோகி என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவா் கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In