விளாத்திகுளம் உட்கோட்டத்தில் கடந்த வாரங்களில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் நேற்று (04.05.2021) தூத்துக்குடி காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்கள்.
குளத்தூர் டாஸ்மார்க் கடை ஊழியரை வழிமறித்து ரூ.6,13,220/- பணத்தை வழிப்பறி செய்த 3 எதிரிகளை கைது செய்த தனிப்படையினருக்கும் மற்றும் தருவைகுளம் பகுதியில் பெண் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கின் எதிரிகளை கைது செய்த தனிப்படையினருக்கும் நேற்று(04.05.2021) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெயக்குமார் அவர்கள் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள். பரிசு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் விளாத்திகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்களை இன்று (05.05.2021) சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றனர்.
விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ் அவர்கள் பரிசு பெற்ற காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களை பாராட்டினார்கள். மேலும் இனி வரும் காலங்களில் காவலர்கள் சிறப்பாக பணிபுரியவும் வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

