திருநெல்வேலி மாவட்டத்தில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழக அரசால் மாவட்ட காவல் துறைக்கு புதிதாக இரண்டு நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் (Bolero) வழங்கப்பட்டுள்ளது.
புதிதாக வழங்கப்பட்ட ரோந்து வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நெ.மணிவண்ணன் ஐ.பி.எஸ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் கூறுகையில் நெடுஞ்சாலைகளில் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும், விபத்துகளை தடுக்கவும், புதிதாக நெடுஞ்சாலை ரோந்து வாகனங்கள் அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து வாகனங்கள் தாழையூத்து உட்கோட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம் -1 எனவும் மற்றுமொரு வாகனம் நாங்குநேரி உட்கோட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நெடுஞ்சாலை ரோந்து வாகனம்-2 எனவும் அழைக்கப்பட்டு, காவலர்கள் பணியமர்த்தப்பட்டு ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்படும் எனவும் கூறினார்.