தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. பெரும்பான்மைக்கு 118- தொகுதிகள் தேவை என்ற நிலையில் 126 இடங்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து, தமிழக முதல் அமைச்சராக வரும் 7 ஆம் தேதி மு.க ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை அதிமுக கூட்டணி வெல்லாத நிலையில், முதல்வர் பொறுப்பை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்துள்ளார். சேலத்தில் இருந்து தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ளார்.

