• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம்!! உண்மையில் நடப்பது தான் என்ன ? ஒரு சிறப்புப் பார்வை

policeseithitv by policeseithitv
April 29, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
சமுக நலனில் தனி அக்கறை செலுத்தும் வேதாந்தா குழுமம்  பெருகி வரும் பொதுமக்கள் ஆதரவு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் தற்போது தேவையில்லாதது ! ஆமாம், ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் நிறைய அரசியல் இருக்கிறது. அதை வெளிப்படையாக சொன்னால் நிறையபேர் வருத்தப்படுவார்கள்.

1990 – 1995 ம் ஆண்டுகளில் தென் தமிழகத்தில் சாதி கலவரம் நடந்தது. அது விசாரணை செய்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அறிக்கை வெளியிட்டது.

தென் தமிழகத்தில் சாதி கலவரங்களை தடுக்க, அங்கு தொழிற்சாலைகள் கொண்டு வந்து வேலைவாய்ப்பை பெருக்க வேண்டும் என்றது குழுவின் அறிக்கை.

அதனை தொடர்ந்து தூத்துக்குடிக்கு கொண்டு வரப்பட்டதுதான் ஸ்டெர்லைட் ஆலை.

மத்திய, மாநில அரசுகளின் அத்துனை அனுமதியையும் பெற்றது அந்த ஆலை.

அமைக்கப்பட்ட ஆலையை மாநில அரசும் மாசுகட்டுப்பாட்டு வாரியமும் கண்காணிப்பது அவர்கள் கடமை.

காப்பர் உற்பத்தியில் இந்திய அளவில் முதலிடம் உலக அளவில் 2 வது இடம் என சாதனை படைக்கும் காலத்தில் ஆலைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்தியாவின் காப்பர் உற்பத்தியில் ஸ்டெர்லைட் நிறுவனம் முக்கிய இடத்திலும் உலகில் முதல் இடத்தில் இருக்கும் சீனாவை முந்தும் தருவாயில் தான் முந்தைய போராட்டங்கள் நடத்தப்பட்டன.

போட்டிபோடாத நிலையில் ஆலையை விரிவாக்கம் செய்வதற்கு முயற்சிகள் மேற்கொண்டது ஸ்டெர்லைட் ஆலை.

அரசியல் கட்சிகளின் ஆயிரம் பேச்சுவார்த்தைகளுக்கு நடுவே தொடங்கியது எதிரான போராட்டம்.

(இந்திய பொருளாதாரத்தில் முக்கிய இடம், தமிழக பொருளாதாரத்தில் முக்கிய இடம், தூத்துக்குடி மாவட்ட பொருளாதாரத்தில் முக்கிய இடம், தூத்துக்குடி மாநகரின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் பிடித்திருந்தது இந்த ஸ்டெர்லைட்)

எதோ பேச்சுவார்த்தை பிரச்னையில் கட்டுப்படுத்தாத போராட்டங்கள் நீண்டு கொண்டே போக, நாடாளுமன்ற தேர்தலும் சீக்கிரமே வரவிருந்த நிலையில் மோடியே வரக் கூடாது என கங்கணம் கட்டும் மதவாதிகளும், மத்தியரசை வீழ்த்தியே ஆகவேண்டும் என்று சுழன்ற அரசியல் அமைப்புக்களும் போராட்ட களத்தை விரிவுபடுத்த, போராட்ட களம் கட்டுப்படுத்த முடியாமல் போனது.

கோரிக்கைகளோடு மாவட்ட கலேக்டர் அலுவலகம் நோக்கி சென்ற பொதுமக்களுடன் சில வன்முறை விரும்பிகள் புகுந்து போலீசுடன் மோத, அங்கு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிர் போனது.

தொடர்ந்து ஆலை மூடல், திறக்க முயற்சிகள் என ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் தற்போது தட்டுபாபாட்டில் உள்ள ஆக்சிஜனை நாங்கள் தருகிறோம் என்று நீதிமன்றம் மூலம் சொல்கிறது ஸ்டெர்லைட் ஆலை.

அதன் அவசியம் கருதி மத்தியரசு உடனே ஏற்றது, மாநில அரசு அரசியல் கட்சிகளின் சம்மதத்துடன் அந்த திட்டத்தை ஏற்றி ருக்கிறது.
மிகவிரைவில் மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டு நாட்டிற்கு தேவையான ஆக்ஸிஜனை தர இருக்கிறது.

இதற்கிடையே மூடப்பட்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கூடாது என்று சிலர் வாதிட்டு வருகிறார்கள். திறக்க விடமாட்டோம். போராட்டம் நடத்துவோம் என சிலர் அச்சுறுத்தி வருகிறார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டிருப்பது சம்மந்தமாக வேறு வழக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கு இருக்கிறது. அதன் தீர்ப்பு படியே ஆலையை திறப்பது ஆலையை நிரந்தரமாக மூடுவது என்பது நடக்கும். அது தனி வழக்கு நடந்து வருகிறது.

இடையில் அவசரகால மக்களின் தேவைகளுக்காக குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே திறக்க வேண்டும். மற்ற உற்பத்திக்கு அனுமதி இல்லை என உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது.

அதன்படிதான் அரசும் ஆலையும் செயல்பட போகிறது. நீதிமன்ற உத்தரவை தாண்டி எதுவுமே செய்துவிட முடியாது.

இந்த செயல் தொடர்ந்து ஆலையை இயக்க செய்வதற்கு முன்னோட்டம் என குற்றம் சாட்டும் சிலர், நீதிமன்ற உத்தரவையும் மீறி ஆங்காங்கே போராட்டம் நடத்துகிறார்கள்.

இது சட்டத்தை மதிக்காத செயல் என்றே கருதமுடியும்.

எனவே தற்போது உள்ள தேவையில்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவோரையும் அதற்கு தூண்டுகோளாக இருப்பவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர்.

Previous Post

தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்

Next Post

ஊரடங்கில் ரயில், விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவர வாகனங்களுக்கு அனுமதி

Next Post
தமிழகத்தில் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் , கோவில்களை திறந்து வழிபட அனுமதிக்க வேண்டும் தமிழக முதலமைச்சருக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் இசக்கிராஜா கோரிக்கை

ஊரடங்கில் ரயில், விமான நிலையங்களிலிருந்து பயணிகளை ஏற்றிவர வாகனங்களுக்கு அனுமதி

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In