தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சி பகுதியில் நாளை (30ம் தேதி) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா- 19 தீவிர தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் மற்றும் மாநகராட்சியில் நாளை (30.04.2021) சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம் நடைபெறும் இடங்கள்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை வார்டு எண்: 59 கனநீர் ஆலை மெயின், வார்டு எண்: 15 நம்மாழ்வார் தெரு சபா, வார்டு எண்: 1 ஆதிபராசக்தி நகர் (கோவில் அருகில்), வார்டு எண்: 51 வீரநாயக்கன்தட்டு (கோவில்அருகில்), வார்டு எண்: 43 பிரையண்ட் நகர் 7வது தெரு (அங்கன்வாடி மையம்) ஆகிய பகுதிகளிலும்,
காலை 11 மணிமுதல் 1 மணி வரை வார்டு எண்: 58 மகாலெட்சுமி நகர் மெயின், வார்டு எண்: 16 நம்பிகை ரோச்- சர்ச், வார்டு எண்: 4 தனசேகர் நகர் மெயின், வார்டு எண்: 48 இந்திரா நகர், ஆதிபராசக்தி கோவில், வார்டு எண்: 39 கே.வி.கே நகர் சர்ச் ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வார்டு எண்: 58 சாமி நகர் மெயின், வார்டு எண்: 33 மட்டக்கடை மெயின், வார்டு எண்: 2 அன்னை இந்திரா நகர் மெயின், வார்டு எண்: 48 வி.க. நகர் (ரேசன் கடை அருகில்), வார்டு எண்: 41 டூவிபுரம் 2வது தெரு (TDTA பள்ளி) ஆகிய பகுதிகளிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
கோவில்பட்டி நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை புதுகிராமம் பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை நந்தவனம் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை போஸ் நகர் பகுதியிலும், காயல்பட்டிணம் நகராட்சியில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை அம்பலமரைக்காயர் தெரு பகுதியிலும், காலை 11 மணிமுதல் 1 மணி வரை சுனாமி நகர் பகுதியிலும், பகல் 2 மணி முதல் 4 மணி வரை வண்டிமலைச்சியம்மன் கோவில் தெரு பகுதியிலும் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெறும்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி பகுதிகளில் காலை 9 மணிமுதல் 11 மணி வரை புதுக்கோட்டை பால தண்டாயுத நகர், மேல மங்கலகுறிச்சி, கிளாக்குளம், துப்பாக்கி சுடுதளம், வல்லநாடு, விநாயகர் கோவில் தெரு- ஆறுமுகனேரி, தலைப்பண்ணை -ஆத்தூர், திருவள்ளுவர் காலனி- நாசரேத், புதுமனை- உடன்குடி, தண்டுபத்து, கிருஷ்ணன் கோவில் தெரு- சாத்தான்குளம், பூச்சிகாடு விலக்கு, இடைசெவல், புதுப்பட்டி, கலைஞானபுரம், ஓணமாக்குளம், அச்சன்குளம் ஆகிய பகுதிகளிலும், 11 மணிமுதல் 1 மணி வரை கோரம்பள்ளம், கீழ மங்கலகுறிச்சி, புதுக்குளம், முருகன்புரம், AITUC காலனி – ஆறுமுகனேரி, தெற்கு ஆத்தூர், வெள்ளரிக்காயூரணி- நாசரேத், ரெங்கநாதபுரம்-உடன்குடி, மானாடு,
செட்டியார் தெற்கு தெரு- சாத்தான்குளம், பூச்சிகாடு, வில்லிசேரி, புங்கவரநத்தம், துலுக்கன்குளம், இளவேலங்கால், அயன்வடமலாபுரம் ஆகிய பகுதிகளிலும், பகல் 2 மணிமுதல் 4 மணி வரை குலையன்கரிசல், ஆலடியூர், புளியங்குளம், பாறைக்காடு, SRS கார்டன் -ஆறுமுகனேரி, குருக்காட்டூர், ஆழ்வார்திருநகரி, வேதக்கோட்டவிளை -கொட்டங்காடு, எள்ளுவிளை, கடாட்சபுரம், குமரன்விளை, மந்திதோப்பு, லக்கம்மாள்தேவி, வைப்பார், வீரபாண்டியபுரம், வேடப்பட்டி ஆகிய பகுதிகளில் காய்ச்சல் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா-19 தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் பொது மக்கள் கரோனா நோய்த் தொற்று குறித்து தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தெரிவித்துள்ளார்.

