சென்னை தெற்கு மாவட்ட போக்குவரத்து பிரிவு சார்பாக கொரனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி 28/04/ 2021 மாலை 5.30 மணியளவில் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் மகேஷ்குமார் அகர்வால்தலைமையிலும் போக்குவரத்து கூடுதல் கமிஷ்னர் பவானீஸ்வரி, தெற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷ்னர் செந்தில்குமாரி வடக்கு மண்டல கூடுதல் கமிஷ்னர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது
பிறகு இருசக்கர விழிப்புணர்வு பேரணியை போலீஸ் கமிஷ்னர் கொடியசைத்து தொடங்கி்வைத்தார் பின்னர் தெற்கு மாவட்ட போக்குவரத்து துணை கமிஷ்னர் தீபா சத்தியன், கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை விளக்கும் விதமாக நாடக கலைஞர்களை நடிக்க வைத்தும் பாடல்கள் மூலமாக விவரித்தும் காட்டினார் இதுவரையில் காவல்துறையில் நடத்தப்பட்ட கொரோனா தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இது மாறுபட்டதாகவேஇருந்தது.மனதில் பதியும் விதமாகவும் அதிகம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது
இந்நிகழ்ச்சியில் உதவி கமிஷ்னர் பாலசுப்புரமணியன் மற்றும் காவல் அதிகாரிகள்,காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்த தெற்கு போக்குவரத்து பிரிவு துணை கமிஷ்னர் தீபா சத்யனை சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் வெகுவாக பாராட்டினார்.பின்னர் அவர் பேசுகையில் கொரோனா தொற்றிலிருந்து எவ்வாறு நம்மை பாதுகாத்து கொள்வது என்றும் பாதிக்கப்பட்டால் தொற்றிலிருந்து எவ்வாறு நிவாரனம் பெறலாம் என்பதை பற்றியும் போலீஸ் கமிஷ்னர் மகேஷகுமார் அகர்வால் விரிவான விளக்கமளித்தார்



