ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழகத்தின் முழு தேவைக்கான ஆக்ஸிஜனை பகிர்ந்தளிக்கும் பொறுப்பை பிரதமர் நரேந்திர மோடியே மேற்கொள்ள வேண்டும். ஆக்ஸிஜன் பகிர்ந்தளிப்பது பற்றி தமிழக அரசு அதிகாரிகளுக்கு பிரதமர் அலுவலகம் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
மருத்துவ வல்லுநர்கள் கருத்தை ஏற்று ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாக திறக்க நிபந்தனைகளுடன் திமுக ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகத்திற்கான ஆக்ஸிஜனை விரைந்து பெறுவதற்கான ஒத்துழைப்பை திமுக தொடர்ந்து வழங்கி வருகிறது என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

