• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.603 கோடியாக உயர்வு

policeseithitv by policeseithitv
April 27, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
தூத்துக்குடியில் 7ம் தேதி இலவச கண் பரிசோதனை முகாம் – தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி பவுன்டேஷன்  ஏற்பாடு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர இலாபம் ரூ.407.69 கோடியிலிருந்து ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளதாக வங்கியின் நிர்வாக இயக்குனர் கே.வி.ராமமூர்த்தி தெரிவித்தார்.
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியானது தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு, 1921ம் ஆண்டு துவங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வரும் பாரம்பரியம் மிக்க பழமையான தனியார் வங்கியாகும். வங்கியானது தனது வரலாற்றில் தொடர்ந்து 99 வருட காலமாக இலாபம் ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது. வங்கியானது 509 கிளைகள், 1,132 ஏடிஎம் மையங்கள், 47 e-lobby மையங்கள், 260 Cash Recycler Machines மற்றும் 12 மண்டல அலுவலகங்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.
நாட்டில் உள்ள 16 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் சுமார் 49 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு சேவையாற்றி வருகிறது. தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற இயக்குநர் குழு கூட்டத்தில் 2020-2021 நிதி ஆண்டின் தணிக்கை முடிவுகள் இறுதி செய்யப்பட்டது. வங்கியின் இயக்குனர்கள் முன்னிலையில் வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கே.வி.ராமமூர்த்தி தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையினை வெளியிட்டார். வங்கியின் பொதுமேலாளர்கள் உடனிருந்தனர்.
வங்கியின் செயல்பாட்டின் சிறப்பம்சங்கள்:
2020-21 ஆம் நிதியாண்டில் வங்கியானது பல்வேறு குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளது. இதற்கு வங்கியின் திட்டமிட்ட நேர்த்தியான கொள்கைகளும், இயக்குனர் குழு தரும் உற்சாகம், உயர் நிர்வாகக் குழுவின் சீரிய திட்டம் மற்றும் அதனை செயல்படுத்தும் அணுகுமுறை, வங்கி ஊழியர்களின் அயராத உழைப்பு மற்றும் இவற்றிற்கு எல்லாம் மேலாக வாடிக்கையாளர்கள் தொடர்ந்து தரும் பொன்னான ஆதரவு ஆகியவை தான் இச்சாதனைகளை எட்டிட உதவியது என்றால் மிகையாகாது.
வங்கி நிர்வாக குழு இடைக்கால பங்கு ஈவு (Dividend) ஒவ்வொரு பங்கிற்கும் ரூ.5 என அறிவித்திருக்கிறார்கள். 2020-21 ஆம் நிதியாண்டில் வங்கியானது தனது மொத்த வணிகத்தில் 11.45% வளர்ச்சியடைந்து ரூ.72,511.45 கோடியை எட்டியுள்ளது.  வைப்புத்தொகை ரூ.40,970.42 கோடி ஆக உயர்ந்துள்ளது. கடன்களைப் பொறுத்தமட்டில் ரூ.31,541.03 கோடி என்ற நிலையில் உள்ளது.
முன்னுரிமை மற்றும் MSME துறைகளுக்கு கடன் வழங்கல்
வங்கியானது விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கைவிட அதிகமாக 79.06% என்ற விகிதத்தில் உள்ளது.
முன்னுரிமைத் துறைகளுக்கு (விவசாயம், குறு, சிறு தொழில் கடன், வியாபாரக்கடன், வீட்டுக்கடன் மற்றும் கல்விக்கடன் துறைகளுக்கு தொடர்ந்து அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. முன்னுரிமைத் துறைகளுக்கான கடன்கள் பாரத ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள இலக்கான 40% என்ற இலக்கைவிட அதிகமாக 79.06% என்ற விகிதத்தில் உள்ளது.
முன்னுரிமைத் துறைகளுக்கு (Priority Sector) வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.22,540.97 கோடிகள் (கடந்த ஆண்டு ரூ.18,711.73 கோடிகள்). இதன் வளர்ச்சி விகிதம் 20.46% ஆகும். விவசாயத்துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ.8,645.66 கோடியாக உள்ளது. இத்துறைக்கு ரிசர்வ் வங்கி நிர்ணயித்த அளவு 18% மட்டுமே ஆகும். இத்துறைக்கு வங்கி மொத்த கடன்களில் 30.33% கடன் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
MSME துறைக்கு வழங்கப்பட்டுள்ள மொத்த கடன்கள் ரூ. 10,169.86 கோடியிலிருந்து ரூ.12,036.34 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 18.35% ஆக உள்ளது.
வங்கியின் வருடாந்திர செயல்பாடு
வங்கியின் வைப்புத்தொகை ரூ.40,970.42 கோடிகள் என்ற நிலையை அடைந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.36,825.03 கோடிகள்) இதன் வளர்ச்சி விகிதம் 11.27% ஆக உள்ளது.
நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கு தொகை (CASA) கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் 22.77% வளர்ச்சி அடைந்து ரூ.11,685.27 கோடியாக உள்ளது.
கடன்களைப் பொறுத்தமட்டில் 11.71% வளர்ச்சியடைந்து ரூ.31,541.81 கோடி என்ற நிலையில் உள்ளது.
சில்லறை கடன்கள் (Retail advances) கடந்த ஆண்டினை விட 19.38% வளர்ச்சியடைந்து ரூ.6,496.11 கோடிகள் என்ற நிலையில் உள்ளது.
வட்டி இல்லா வருமானம் (Non Interest Income) ரூ.644.17 கோடியாக உயர்ந்துள்ளது (கடந்த ஆண்டு ரூ.526.45 கோடிகள்) இதன் வளர்ச்சி விகிதம் 22.36% ஆகும்.
வங்கியின் இயக்க செலவுகள் (வங்கியின் இயக்க செலவுகள் (Operating Expenses) ரூ.979.66 கோடிகளாக உயர்ந்துள்ளது. (கடந்த ஆண்டு ரூ.850.91 கோடிகள்) இது கடந்த ஆண்டை விட 15.13% உயர்ந்துள்ளது. வங்கியின் செயல்பாட்டு இலாபம் (Operating Profit) ரூ.995.05 கோடியிலிருந்து ரூ.1,202.04 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 20.80% ஆக உள்ளது.
நிகர இலாபம் (Net Profit) ரூ.407.69 கோடியிலிருந்து ரூ.603.33 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர வட்டி வருமானம் (Net Interest Income) ரூ.1,319.51 கோடியிலிருந்து ரூ.1,537.53 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கியின் நிகர மதிப்பானது (Net Worth) ரூ. 3,980 கோடியிலிருந்து ரூ.4580 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் வளர்ச்சி விகிதம் 15.08% ஆகும்.
வட்டி வருமானம் (Interest Income) ரூ.3,466.11 கோடியிலிருந்து ரூ.3,609.05 கோடியாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டினை காட்டிலும் 4.12% வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய வட்டியானது ரூ.2,146.60 கோடியிலிருந்து ரூ.2,071.52 கோடியாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டினை விட 3.50% குறைந்துள்ளது. மொத்த கடன்களில் மொத்த வருவாய் ஈட்டா கடன்கள் (Gross NPA) 3.44% ஆகும். (கடந்த ஆண்டு 3.62%) நிகர வருவாய் ஈட்டா கடன்கள் (Ner NPA) 1.98% ஆகும் (கடந்த ஆண்டு 1.80% ஆகும்)
வங்கியின் வருவாய் ஈட்டா கடன்கள் மற்றும் மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் சேர்த்து (NPA plus Restructured advances) 3.93% சதவிகிதமாக உள்ளது. Capital Adequacy Ratio (Basel III) 16.74% என்ற விகிதத்தில் இருந்து 18.94% ஆக உயர்ந்துள்ளது. Capital Adequacy Ratio (Basel II) 16.76% என்ற நிலையிலிருந்து 18.96% ஆக உயர்ந்துள்ளது. Provision Coverage Ratio இந்த ஆண்டில் 79.53% ஆக உள்ள து (கடந்த ஆண்டு 80.75% ஆகும்) வங்கி கூடுதலாக நிலையான கடன்களுக்காக (Additional Provision on Standard Asset (Covid Il wave) Rs.50 கோடிகள் ஒதுக்கீடு செய்துள்ளது.
பங்கிற்கான புத்தக மதிப்பு
ஒரு பங்கின் தற்போதைய புத்தக மதிப்பு ரூ.321.38 ஆக உயர்ந்துள்ளது. இதன் முகமதிப்பு ரூ.10 ஆகும். பங்கு ஆதாயத்தின் மதிப்பு ரூ.42.34 ஆகும்.
விரிவாக்கம்
புதிதாக 91 கேஷ் ரீசைக்ளர் இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளன. தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 260 ஆகும். வாடிக்கையாளர்களின் வசதிக்காக புதிதாக 16 e-lobby மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. தற்போது இதன் மொத்த எண்ணிக்கை 47 ஆகும்.
2020-21 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய திட்டங்கள்
பணத்தை வரிசைப்படுத்தவும், பிரிக்கவும் தொகுக்கவும் வங்கியின் இரண்டாவது தானியங்கி – Robotic செயல்பாடுகள் தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் துவங்கப்பட்டது.
வங்கி புதிய பரிந்துணர்வு ஒப்பந்த (With IDBI) அடிப்படையில் FASTag அனைவருக்கும் அதன் கிளைகளின் மூலம் வழங்கி வருகிறது.
வங்கி பொது காப்பீட்டு சேவைக்காக நியூ இந்தியா அஸ்யூரன்ஸ் லி. நிறுவனத்துடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருக்கின்றது. வங்கி இந்த கொரானா பரவல் காலத்தில் மத்திய அரசு அறிவித்த Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு 13601 புதிய கடன் கணக்குகள் மூலம் ரூ.1,559.65 கோடிகள் வழங்கியுள்ளது.
2020-21 ஆண்டில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள IT திட்டங்கள்
TMB DigiLobby எனும் புதிய app மூலம் வங்கியின் பல்வேறு சேவைகளை
வாடிக்கையாளர்கள் ஒருங்கிணைந்து பெற்றுக்கொள்ளும் வசதி TMB WhatsApp banking அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. “TMB – RUPAY Select International Debit Card” எனும் புதிய டெபிட் கார்டு பல்வேறு தேர்ந்தெடுக்கப்பட்ட வசதிகளுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அரசுத் துறை நடவடிக்கைகள் செயலாக்கத்திற்காக Public Fund Management System (PEMS) நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
2021-2022 ஆண்டிற்கான வணிக வளர்ச்சி அணுகுமுறைகள்
நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு (CASA) வளர்ச்சியினை தொடர்ந்து முன்னெடுத்து செல்லுதல் Retail Lending மீது அதிக முக்கியத்துவம் அளித்தல் புதிய தொழில்நுட்பம் மற்றும் மனித வள மேலான்மையின் கொள்கைகள் மூலம் வணிக வளர்ச்சியினை அதிகப்படுத்துதல் மற்றும் சேவையில் புதிய தொழில்நுட்ப அணுகு முறைகள் மேம்படுத்துதல்
2021-2022 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ள புதிய திட்டங்கள்
புதிதாக 50 e-lobby நிறுவுவதன் மூலம் வங்கியின் நூற்றாண்டில் மொத்த e-lobby எண்ணிக்கையினை 100 ஆக உயர்த்திடல்
நடமாடும் e-lobby தொடங்குதல்
Finacle 10.x migration
மேம்படுத்தப்பட்ட புதிய மொபைல் வங்கி சேவையினை அறிமுகப்படுத்துதல் (CAPEX Model)
ஒருங்கிணைந்த கணக்கு துவங்கும் வசதி வாடிக்கையாளர்கள் வசதிக்காக video KYC மூலம் கணக்கு துவங்கும் வசதி
வாடிக்கையாளர்கள் நலன் மேலாண்மை – Customer Relationship Management solution (CRM) மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் (Call Centre Operations) அறிமுகப்படுத்துதல்” இவ்வாறு நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி – உச்சநீதிமன்றம் உத்தரவு

Next Post

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

Next Post
ஐபேக் டீம் அதிரடி ரிப்போர்ட் எதிரொலி – 180 தொகுதிகளில் திமுக நிற்க முடிவு!!

ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியாகும் ஆக்ஸிஜனை தமிழகத்தின் தேவைக்கேற்ப முழுமையாக பகிர்ந்தளிக்க வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In