துரைப்பாக்கம் பகுதியில் ஆட்டோவில் கஞ்சா எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளஞ்சிறார் உட்பட 2 நபர்களை விசாரணை செய்து, 15 கிலோ கஞ்சா கைப்பற்றிய துரைப்பாக்கம் காவல்துறையினருக்கு சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்
சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் உத்தரவான “போதைக்கெதிரான தடுப்பு நடவடிக்கையான “DAD – DRIVE AGAINST DRUGS ” தொடர்ச்சியாக, துரைப்பாக்கம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுரேஷ் தலைமையிலான காவல் குழுவினர் 18.04.2021 அன்று பெருங்குடி, ஓ.எம்.ஆர் அப்பல்லோ மருத்துவமனை சிக்னல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, ஆட்டோவில் சவாரியாக கஞ்சா எடுத்து வந்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சானிகெமுண்டு, வ/19 மற்றும் 17 வயது இளஞ்சிறார் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து, அவர்களிடமிருந்து 15 கிலோ எடை கொண்ட கஞ்சா கைப்பற்றப்பட்டது. மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் சென்னை பெருநகர போலீஸ் கமிஷ்னர் நேரில் அழைத்து வெகுமதி வழங்கி பாராட்டினார்

