சென்னை பெருநகர காவல் துறை, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவ குழுவினருடன் இணைந்து ராஜரத்தினம் மைதான வளாகத்தில் கிருமிநாசினி திரவம் தயாரிக்கப்பட்டு காவல் ஆளிநர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகிறது. 21.04.2021 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மகேஷ்குமார் அகர்வால், கிருமி நாசினி தயாரிக்கும் கூடத்திற்கு சென்று அங்கு தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி திரவங்களை பார்வையிட்டார்.


