2020 ம் வருடத்தில் கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது சிறப்பாக பணியாற்றிய காவல்துறை, வருவாய்துறை, சுகாதார துறை ஆகியவர்களுக்கு தூத்துக்குடி ரோச் விக்டோரியா ஹாலில் வைத்து 21.04.2021 அன்று ROTERY CLUB OF SEASIDE TUTICORN சார்பாக பாராட்டு பதக்கம் வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கொரோனா வைரஸ் முதல் அலை பரவியபோது அதனை தடுக்க சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு சிறப்பாக பணியாற்றிய தற்போதைய விளாத்திகுளம் உட்கோட்டம் அப்போதைய தூத்துக்குடி நகர உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் திரு பிரகாஷ் அவர்களுக்கும் மற்றும் தாசில்தார், உதவி ஆணையர்கள் ( சுகாதாரத்துறை)அவர்களுக்கும் பாராட்டு பதக்கம் வழங்கப்பட்டது.
விழாவில் ROTARY CLUB OF SEASIDE TUTICORN சங்கத்தின் மாவட்ட ஆளுநர் முருகதாஸ், தலைவர் பாலமுருகன் மற்றும் திரு. ஆல்ட்ரின் மொரண்டா, சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.


