கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழகம் முழுவதும் அனைத்து தரப்பினரும் மனிதநேயத்தோடு பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆணைங்கிணங்க தூத்துக்குடியில்முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில அமைப்பு செயலாளருமான சி. த செல்லப்பாண்டியன் சார்பில் தூத்துக்குடியில்15 வது நாட்களாக அரிசி, காய்கறி உள்ளிட்ட பொருட்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் நாள் தோறும் நிவாரண பொருள் அரிசி வழங்கி வரும் நிலையில் நேற்று 15 வது நாட்களாக தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48(பழைய) வது வார்டுக்கு உட்பட்ட .. திரு வி க நகர், இந்திரா நகர், ஜே ஜே நகர், பைபாஸ் ரோடு தொடர்ச்சி, எஸ் எஸ் நகர் பகுதியில் 800 குடும்ப அட்டைதாரர்களுக்கும்.
21 வது வார்டுக்கு உட்பட்ட சண்முகபுரம் வண்ணார் தெரு பகுதியில் உள்ள 200 குடும்ப அட்டைதாரர்களுக்கும். நேற்று ஒரே நாளில் மட்டும் 1000
குடும்பங்களுக்கு நிவாரண பொருள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கிழக்கு பகுதி செயலாளர் பி.சேவியர், மேற்கு பகுதி செயலாளர் ஏ.முருகன் , முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், ஜெ பேரவை மாவட்ட துணைச் செயலாளர் ஜீவாபாண்டியன், அரசு வழக்கறிஞர் திரு அன்ட்ரூமணி, சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள் உதவியாளர் மாவட்ட அம்மா பேரவைபி மூர்த்தி, ,போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க மண்டல இணைச்
செயலாளர் சங்கர்,மேலூர் கூட்டுறவு வங்கி துணைத் தலைவர் என். சிவ சுப்ரமணியன் ,
மாவட்ட இளைஞரணி மில்லை ஆர் எல் ராஜா ,வட்டச்செயலாளர் பெருமாள், 48 வது பகுதி பெரியவர்கள், பெருமாள், முத்துப்பாண்டி, அய்யம்பெருமாள், செல்வராஜ், வட்ட செயலாளர்கள் (பொறுப்பு) பாலா ,பூர்ணசந்திரன், முருகன் (பாம்பு கோயில்)
வட்டப்பிரதிநிதிகள் சங்கர், , அருண்குமார், ஐயப்பன், துரைசிங், சுப்புராஜ், போக்குவரத்து கழக அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள்..பி சங்கர் , சண்முகராஜ் ,கருப்பசாமி ,ராஜேந்திரன் வார்டு நிர்வாகிகள்..சுப்புராஜ், நயினார் ,ஆறுமுகநயினார் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு சாம் கௌதம் ஆகியோர் கலந்து கொண்டனர் தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆணையின்படி தூத்துக்குடியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தொடர்ந்து 15வது நாட்களாக சமூக இடைவெளியை கடைபிடித்துக் கொண்டு வார்டு வாரியாக சென்று ஏழை எளிய பொதுமக்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சரும் மாநில அமைப்புச் செயலாளருமான சி. த செல்லபாண்டியன் அவர்கள் பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்களை தொடர்ந்து வழங்கி வருவதை தூத்துக்குடியில் உள்ள அனைத்து தரப்பினரும் அதிமுக தலைமையையும் முன்னாள் அமைச்சரின் மனிதநேயமிக்க பணியினையும் மனதார பாராட்டி வருகிறார்கள்.
தடை உத்தரவு நீங்கும் வரை பொதுமக்களுக்கு மாநில அமைப்பு செயலாளர் சி. த செல்லப்பாண்டியன் சார்பில் நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டு கொண்டே இருக்கும் என்று தெரிவிக்கப் படுகிறது. இந்நிலையில் 16 வது நாளாக மீனாட்சிபுரம் உட்பட அருகில் உள்ள சில பகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருள் வழங்க உள்ளார்கள் என தெரிவிக்கபட்டது.
செய்தி தொகுப்பு
ஆத்தி முத்து

