இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தென்சென்னை மாவட்ட செயலாளர்
மடுவை எஸ்.பீர்முகமது ஏழை எளிய மக்களுக்கு மூன்றாவது கட்டமாக நிவாரண பொருள் வழங்கினார்.
===============
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருவதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது.இதனால் அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர். இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்கள் அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் தொடர்ந்து உணவு பொருள்கள், காய்கறி அரிசி ஆகியவை வழங்கி வருகின்றனர். அந்த அடிப்படை யில் இந்த பேரிடர் காலங்களில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் உள்ள
மடுவாங்கரை பகுதியில் உள்ள அணைத்து தரப்பு மக்களுக்கும் இன்று
சுமார் 100 க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொருள் வழங்கி உள்ளார். இது மூன்றாவது கட்டமாக மனித நேயர் எஸ். பீர் முகமது (நியூ ராயல் ) அவர்கள் சாதி, மத பேதமின்றி அணைத்து ஏழை மக்களுக்கும் அரிசி மற்றும் உணவு பொருள்களை மடுவாங்கரையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து அணைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கினார்
இந்த கால கட்டத்தில் ஏழை எளிய மக்களுக்கு மனித நேயர் மடுவை எஸ். பீர் முகமது (நியூ ராயல் ) வழங்கி வருவதை அப்பகுதி மக்கள் மனித நேயரை மனதார வாழ்த்துகிறார்கள் 
செய்தி தொகுப்பு
வேளச்சேரி சாகுல், தலைமை நிருபர்
போலீஸ் செய்தி டிவி

