தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் நலச்சங்க உறுப்பினர்களுக்கு டவுண் டி.எஸ்.பி. பிரகாஷ் உணவு பொருள்கள் வழங்கினார்.
கொரோனா வைரஸ் உலகத்தையை புரட்டி போட்டுள்ள நிலையில் இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு அமுலில் இருந்து வருவதால் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கபட்டு உள்ளது..இதனால் அன்றாடம் வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வரும் பல ஏழை, எளிய மக்கள் மிகவும் வறுமையில் இருந்து வருகின்றனர்.
இதனை போக்கும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர்கள்
அரசியல் கட்சியினர், தொழில் அதிபர்கள், மனித நேயமிக்க நல்ல உள்ளங்கள் ஆகியோர் நாட்டில் அணைத்து பகுதிகளிலும் தொடர்ந்து உணவு பொருள்கள், காய்கறி அரிசி ஆகியவை வழங்கி வருகின்றனர்.
அந்த அடிப்படையில் இந்த பேரிடர் காலங்களில் மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ள சங்க உறுப்பினர்கள் 80 நபர்களுக்கு நிவாரண உதவி கேட்டு தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் .பிரகாஷ் அவர்களை நிர்வாகிகள் தொடர்புகொண்டு கோரிக்கை வைத்துள்ளனர். அந்த கோரிக்கையை ஏற்று அவர்கள் மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர் உயர்திரு அருண் பாலகோபாலன் I.PS அவர்களின் அறிவுறுத்தலின்படி தாயுள்ளத்தோடு நமது உறுப்பினர்களுக்கு உதவ முன்வந்தார்கள் அதனடிப்படையில் எங்களது சங்கத்தில் நலிவடைந்த நிலையில் உள்ள சங்க உறுப்பினர்கள் 80 நபர்களுக்கு தேவையான பலசரக்கு மளிகை சாமான்களை வழங்கி உதவினார்கள் அந்த பொருட்களை தற்போது மூன்றாம் கட்ட நிவாரண உதவியாக சங்க உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி உறுப்பினர் அல்லாத ஏழை-எளிய கலைஞர்களுக்கும் கொடுத்து வருகின்றோம் இவற்றை நாளை அல்லது நாளை மறுநாள் புறநகர் பகுதிகளுக்கும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சென்று கொடுத்து வருகின்றோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
ஏப்ரல் மே ஆகிய இரு மா
தங்களில் நடைபெறும் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளை மட்டுமே வைத்து வருடம் முழுவதும் தங்கள் வாழ்வாதாரத்தை சீர் செய்து வாழ்க்கையை கடத்தும் போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளருக்கு இந்த வருடம் சீசன் தொழில் இல்லாமல் போய்விட்டது இதனால் பல வீடியோ ஒளிப்பதிவாளர்கள் தங்கள் வீடுகளில் சாப்பாட்டுக்கு கூட வழியின்றி வறுமை நிலையில் இருந்து வந்தனர் இதுகுறித்து தூத்துக்குடி துணை காவல் கண்காணிப்பாளர் (நகரம்) உயர்திரு பிரகாஷ் M.A., அவர்கள் கவனத்திற்கு கொண்டு சென்றதில் அவர் இவ்வாறான உதவிகள் தந்து எங்களை ஊக்கப்படுத்தினார் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை எங்களது சங்கத்தின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம் 
தூத்துக்குடி மாவட்ட போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக உதவி செய்ய அறிவுறுத்திய மாவட்ட காவல் காவல் கண்காணிப்பாளர்உயர்திரு அருண் பாலகோபாலன் I.PS அவர்களுக்கு எங்களது சங்கத்தின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

