• 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV
  • Login
Policeseithi
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்
No Result
View All Result
Policeseithi
No Result
View All Result

கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்

policeseithitv by policeseithitv
April 12, 2021
in 24/7 ‎செய்திகள், தமிழகம், முக்கிய செய்திகள்
0
கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி, பாராட்டுச்சான்றிதழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிக்கும் பொறுப்பு காவல் ஆய்வாளராக நியமிக்கப்பட்டு தேர்தல் பாதுகாப்பு பணியில் சிறப்பாக பணியாற்றிய விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கான விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மீராள் பானு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்கான தெர்மல்நகர் காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி, திருச்சந்தூர் சட்டமன்ற தொகுதிக்கான திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் இந்திரா, ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்கான ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லெட்சுமி பிரபா, ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதிக்கான கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் மாரியம்மாள், கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கான கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் நாககுமாரி ஆகியோரின் மெச்சத் தகுந்த பணிக்காகவும்,

கடந்த 25.02.2021 அன்று சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கின் எதிரிகள் 4 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்த சிப்காட் காவல் நிலைய ஆய்வாளர் வேல்முருகன், சிறப்பு உதவி ஆய்வாளர் சொக்கலிங்கம், காவலர் சுஜேந்திரன் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 24.03.2021 அன்று ஆறுமுகநேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரூபாய் 5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 2 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 500 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த ஆறுமுகநேரி காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார், திருச்செந்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுந்தரம் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 19.03.2021 அன்று கயத்தார் காவல் நிலைய எல்லைகுட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனை செய்த வழக்க்கில் எதிரிகள் 2 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த கயத்தார் காவல் நிலைய ஆய்வாளர் மணிவண்ணன், உதவி ஆய்வாளர் அரிக்கண்ணன், காவலர் சீனிவாசன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 19.03.2021 அன்று கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த கொலை வழக்கு எதிரிகள் 3 பேரை கைது செய்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய குற்ற பிரிவு உதவி ஆய்வாளர் முத்து விஜயன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 01.02.2021 அன்று தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆஷா என்பவரின் கழுத்தில் கிடந்த 17 சவரன் தங்க நகையை டூவீலரில் வந்த எதிரி பறித்து சென்ற வழக்கில் துரிதமாக செயல்பட்டு எதிரியை கைது செய்து நகையை மீட்ட தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் வேல்ராஜ், காவலர்கள் செந்தில், திருமணி, முத்தையாபுரம் காவல் நிலைய காவலர் முத்துபாண்டி ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய 2ம் கேட் பகுதியில் வாகன தணிக்கையின் போது அந்த வழியாக வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அவ்வாகனம் சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய இருசக்கர வாகன காணாமல் போன வழக்கின் வாகனம் என்று கண்டுபிடித்தும், மேலும் விசாரணையின் போது அதே சென்னை கோட்டூர்புரம் காவல் நிலைய இருசக்கர வாகன காணாமல் போன வழக்கில் மற்றொரு இருசக்கர வாகனமும் கைப்பற்றபட்டு சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உதவியாக இருந்த தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆர்தர் ஜஸ்டின் சாமுவேல், முதல் நிலை காவலர்கள் சுடலைமணி, சகாய ஜோஸ்பின் ரஞ்சிதா, காவலர் சரவணகுமார் ஆகியோரின் மெச்சத்தகுந்த பணிக்காகவும்,

கடந்த 31.03.2021 அன்று தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் கெட்டநடத்தைகாரர்கள் சரித்திர பதிவேட்டில் உள்ள பல்வேறு கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் சம்மந்தப்பட்ட 2 எதிரிகள் சேர்ந்து குற்றம் செய்யும் நோக்கத்துடன் செய்துங்கநல்லூரில் தலைமறைவாக இருந்த எதிரிகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவர்களை கைது செய்த தாளமுத்துநகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகாராஜாவின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 21.10.2014 அன்று குலசேகரபட்டினம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் சம்மந்தப்பட்ட சாட்சிகளை முறையாக ஆஜர் செய்து வழக்கின் எதிரியான கணவருக்கு 08.04.2021 அன்று 10 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் 1000/- அபராதம் கிடைக்க செய்த குலசேகரபட்டினம் காவல் நிலைய காவலர் தங்கபாண்டி என்பவரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

கடந்த 09.03.2021 அன்று தாளமுத்துநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லூர்தம்மபாள்புரததில் சட்ட விரோதமாக கஞ்சா விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை கைப்பற்றி எதிரிகள் 3 பேரை கைது செய்து வழக்கு பதிவு செய்ய உதவியாக இருந்த தாளமுத்துநகர் காவல் நிலைய முதல் நிலை காவலர் பாலகுமார் மற்றும் காவலர் சிலம்பரசன் ஆகியோரின் மெச்சதகுந்த பணிக்காகவும்,

10 காவல் ஆய்வாளர்கள் உட்பட 28 காவல்துறையினரின் சிறந்த சேவையை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எஸ்.ஜெயக்குமார் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

இப்பாராட்டு நிகழச்சியின்போது தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. கோபி, தூத்துக்குடி தலைமையிடத்து காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. கார்த்திகேயன் மற்றும் தனிப்பிரிவு ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் உடனிருந்தனர்.

 

Previous Post

பணியின் போது உயிரிழந்த சிறப்பு எஸ்.ஐ குடும்பத்தினரிடம் மாவட்ட எஸ்.பி 3 லட்சம் நிதியுதவி

Next Post

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

Next Post
திருச்செந்தூர் கோவிலில் மாசி திருவிழா தேரோட்டம்  நடந்தது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

  • 24/7 ‎செய்திகள்
  • staff
  • போலீஸ் செய்தி TV

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

No Result
View All Result
  • 24/7 ‎செய்திகள்
  • அரசியல்
  • இந்தியா
  • உலகம்
  • தமிழகம்
  • முக்கிய செய்திகள்
  • போலீஸ் செய்தி TV
  • குற்றம்
  • போலீஸ் இடமாற்றம்

© 2020 Policeseithi - Designed by Good Will Design - 9003710043.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In