நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2021 -ல் சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கும் காவல் துறையுடன் இணைந்து பொதுமக்கள் வாக்களிக்க சிறப்பாக பணிபுரிந்த என்எஸ்எஸ் மாணவர்களுக்கும் அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் 12/04/2021 இன்று பாராட்டு சான்றுகளை வழங்கி கௌரவித்தனர் காவலர்கள் முதல் உதவி ஆய்வாளர் களுக்கும் மேலுள்ள அதிகாரிகளான கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வரை சிறப்பாக பணிபுரிந்தமைக்கா பாராட்டுச் சான்றிதழை பெற்றுக் கொண்டனர்.
மேலும் 135 -க்கும் மேற்பட்ட NSS மாணவர்கள் கலந்து கொண்டனர். பொது நலனில் மேலும் மேலும் அக்கறையுடன் செயல்படுமாறு அறிவுறுத்தி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர்




